மதத்தின் பெயரில் நாட்டை துண்டாடும் பா.ஜ.க. கே.எச்.முனியப்பா குற்றச்சாட்டு

 கோலார், ஏப். 9-  அனைத்து வகுப்பினரும் கூடி வாழும் நந்த வனமாக இருக்கும் இந்தியாவை மதவாத அரசியல் மூலம் சீர் குலைக்கும் முயற்சியை மத்தியில் ஆளும் பாஜ அரசு மேற்கொண்டு வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா குற்றம்சாட்டினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை வகுப்பினரின் பாது காப்புக் கேடயமாக இருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே. மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி நடத்தியதின் பயனாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதார மேம்பாடு, அரசியல் வளர்ச்சி, சமூகநீதி ஆகியவை கிடைத்தது. காங்கிரஸ் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருந்திருந்தால், அந்த பிரிவில் வரும் வகுப்பினரின் வாழ்வாதாரம் பூஜ்யமாகி இருக்கும்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, 20 அம்ச திட்டம் அறிமுகம் செய்தபோது, நாட்டில் இயங்கிவந்த தனியார் வங்கிகளை தேசியமயமாக்கினார். பல தனியார் தொழிற் சாலைகளை பொதுத் துறை நிறுவனமாக மாற்றினார். இதனால் இடஒதுக்கீடு அடிப்படை யில் அனைத்து வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் குடும்பங்கள் வளர்ச்சி அடைந்தது. தற்போது ஆளும் பாஜ அரசு, பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் தனியார்மய மாக்கியும், நல்ல லாபத்தில் இயங்கி வரும் எல்அய்சி உள்பட இன் சூரன்ஸ் கம்பெனிகள், வங்கிகளை தனியார் மயமாக்கி வருகிறது.  மத்திய அரசின் பிற்போக்கு பார்வை காரண மாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் காலனி ஆதிக்கத்தின் கீழ் வரும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. ரயில்வே, தொலைபேசி உள்ளிட்ட நிறுவனங்களும் தனியாரிடம் ஒப்படைப்பதால், லட்சக் கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.

இதனால் இரத்தப் புரட்சி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. அந்த சூழ்நிலையை மத்தியில் ஆளும் பாஜ அரசு ஏற்படுத்தி கொடுக்கக் கூடாது. இந்திய மதச்சார்பற்ற நாடு என்பதை நமது அரசமைப்பு சட்டம் தெளிவுப்படுத்தியுள்ளது. மக்கள் அவர்கள் விரும்பும் மதத்தை சேரவும் வழிபடவும் யாரும் தடுக்க முடியாது. இந்து மதத்தில் தான் இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டு தடுக்கவும் முடியாது. இதை புரியாமல் ஆட்சி, அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற மமதையில் நாட்டை இந்துத்வா அடிப்படையில் கொண்டு செல்லும் முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார்.

சுங்கச்சாவடி கட்டணம் நியாயமாக இல்லை உயர்நீதிமன்றம் கருத்து

 சென்னை, ஏப். 9- தாம்பரம்- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் 2019ஆம் ஆண்டு முடிவடைந்து விட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி ஜோசப் சகாயராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று (8.4.2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது, “சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை. இதுபோல, அதிக கட்டணம் வசூலிக்க முடியாதுஎன நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அறிவுறுத்தி, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், “சுங்கக் கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள் கையை பின்பற்ற வேண்டும். சுங்கச் சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

Comments