உதவி வேளாண் அலுவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 சென்னை, ஏப். 12- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

* பிப்ரவரி 5ஆம் தேதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக் கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்ட அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கு திட்டமிடப்பட்ட எழுத்து தேர்வு வரும் 17, 18 ஆகிய நாட்களில் காலை மற்றும் மாலையிலும், 19ஆம் தேதி காலையில் மட்டும் 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

* நுழைவுச்சீட்டுகள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பெறலாம்

* கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண் டும். தவறினால் அவ்வாறான விடைத் தாள்கள் தேர்வாணையத்தால் செல் லாததாக்கப்படும்.

* எந்த ஒரு தேர்வரும் காலை நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழை யவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக் கூடத்தில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிற்பக லில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்தில் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர் வுக்கூடத்தில் இருந்து வெளியேறவே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* விரைவுத் தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக் கூடம் அமைந்துள்ள இடத்தினை கூகுள் மேப் மூலமாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.

* தேர்வு அறைக்கு அலைபேசியை கொண்டு செல்ல அனுமதியில்லை. எனவே, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் தங்களது அலைபேசி உட்பட பிற உடமைகளை தேர்வு மய் யத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Comments