ரெம்டிசிவர் மருந்து தயாரிப்பை அதிகப்படுத்தவும், விலையை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி. ஏப். 15 நாட்டில் நேற்று (14.4.2021) ஒரே நாளில் 1,85,104 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உலகளவில் இந்தியாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மகாராட்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வரும் நிலையில் குஜராத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஊகிக்கக்கூட முடியாத அளவுக்கு உள்ளது.

இங்கு, மருத்துவமனைக்குள் செல்வதற்கு மணிக்கணக்காக ஆம்புலன்ஸ்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது, வெண் டிலேட்டர் தேவையும் அதிக ரித்து வரும் அதேவேளையில், ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் குஜராத் தில் உள்ள மயானங்களில் மக்கள் கூடுவதைக்  குறைக்க இறந்த வர்களின் உடல்களை இரவு நேரங்களில் அடக்கம் செய்வ துடன் சவக்குழிகளும் முன்கூட் டியே தோண்டப்பட்டு உள்ளன. கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான ரெம் டிசிவர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க ஏப்ரல் 11 முதல் ஏற்று மதிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள 7 மய்யங்களில் ஒரு மாதத்திற்கு மொத்தம் 10 லட்சம் டோஸ்கள் ரெம்டிசிவர் மருந்து தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது, ஏற்கெனவே கூடுதலாக 30 லட்சம் மருந்துகள் தயாரிப்பில் உள்ளது.

தற்போது மாதம் ஒன்றுக்கு 38.8 லட்சம் மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இந்த உற்பத்தித்திறன் கூடிய விரைவில் மாதம் சுமார் 80 லட்சம் என்ற அளவிற்கு இரட்டிப்பாக உயர விருக்கிறது. மேலும், பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பு களுக்கு ஏற்ப இதன் விலை 900 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரை தற்போது விறக்கப்படுகிறது. இந்த விலையைக் குறைக்கவும் மத்திய அரசு மருந்து நிறுவனங் களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மத் திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்று "டாக்டர் ரெட்டி"ஸ் நிறு வனம் தனது மருந்து விலையை 50 சதவீத அளவுக்கு குறைப்பதாக கூறியுள்ளது.

மருந்து தட்டுப்பாட்டை போக்கவும், கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்கவும், இந்த மருந்து எந்தெந்த முகவர்களிடம் கிடைக் கும் என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வலை தளத்தின்மூலம் அனைவரும் அறியச் செய்ய வேண்டும். அதே நேரத்தில், இந்த மருந்தை தனி நபர்கள் வீட்டில் லேசான காய்ச்சல் உள்ளவர்களுக்கு வழங் கக் கூடாது என்றும், மருத்துவ மனையில் சுவாசக் கோளாறுடன் தீவிர சிகிச்சையில் உள்ளவர் களுக்கு மட்டுமே வழங்க வேண் டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Comments