இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்

இங்கிலாந்து, ஏப். 11- இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தின் கணவர் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல் நலக் குறைவால் 9.4.2021 அன்று காலமானார்.

வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார்.

மறைந்த இளவரசர் பிலிப், 1921ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.

சுமார் 65 வருடங்கள் ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017ஆம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக் கொண்டார். இவர் துடிப்பாக இருந்த காலத்தில் ராணியின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர்.

பிலிப், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே இருந்த இதய நோய் மற்றும் நோய்தொற்றுக்காக சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். இந்த நிலையில் வெள்ளியன்று காலமாகியுள்ளார்.

நார்வே நாட்டில் கரோனா விதிகளை பின்பற்றாத பிரதமருக்கு அபராதம் விதிப்பு

நார்வே, ஏப். 11- அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில், கரோனா விதிகளை மதிக்கத்தவ றிய அந்நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்-க்கு  காவல்துறையி னர் அபராதம் விதித்துள்ளனர்.

 நார்வே நாட்டில் இருமுறை பிரதமராக பதவி வகித்துள்ள எர்னா சொல்பேர்க் கடந்த பிப்ர வரி மாத இறுதியில் தனது  60 ஆவது பிறந்த நாளை கொண்டா டினார். நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால்,

10- க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லை என்று நார்வே அரசு அறிவித்தது. 

ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை மீறி  தனது குடும்ப உறுப் பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளைக் கொண்டா டியதால் பிரதமருக்கு 20 ஆயிரம் நார்வே குரோனன் தொகையை அபராதமாக காவல்துறையினர் விதித்துள்ளனர்.  நார்வே நாட்டில் இதுவரை 1,01,96 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments