உடல் எடை, கொழுப்பை குறைக்கும் பழம்

டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம். உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்புகொழுப்பு குறைப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும். மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் பழம் இந்த டிராகன் பழம்.

நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு சிறந்த ஆற்றலை கொடுப்பது டிராகன் பழத்தின் முக்கியமான பலனாகும். உடலின் மிக பெரிய சத்து வைட்டமின்-சி. இது டிராகன் பழத்தில் அதிகமாக இருக்கிறது. வைட்டமின்-சியை தவிர வைட்டமின்-பி சத்தும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இதிலிருக்கும் பி-1, பி-2, பி-3 சத்துக்கள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன, கொழுப்பு அளவை குறைக்கின்றன. டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமானமும் சீராகிறது. குறிப்பாக குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.

Comments