மத பழக்கத்தை மாற்றிவிட்ட கரோனா!

உடல்களை எரிக்கலாம் கத்தோலிக்க நிர்வாகம் அறிவுறுத்தல்

அகமதாபாத்,ஏப்.17- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாள்தோறும் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கரோனா தொற்றின் காரணமாக குஜ ராத்தில் பெருமளவிலான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றனகிறித் தவ மதத்தில் இறந்தவர்களின் உடலை புதைத்து கல்லறை கட்டுவது வழக்கம் என்றாலும்தற்பொழுது கரோனா நோய்த் தொற்றின் காரணமாக இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு போதிய அளவில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுஅகமதாபாத்தில் உள்ள மயானங்களில் உடல்களை அடக்கம் செய்ய இடம் கிடைக்கவில்லைஇதனால்அகம தாபாத் கத்தோலிக்க டயோசீஸ் (திருச் சபைகளை நிர்வகிக்கும் அமைப்புதங்கள் சபையை சார்ந்த மக்களுக்கு கடிதம் ஒன்றை 15.4.2021  அன்று எழுதியுள்ளது.

அதில்,‘‘கரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் களை எரியூட்டுமாறு அறிவுறுத்துகிறோம்இதுபோன்ற பேரிடர் காலத்தில் வேறு வழி யின்றி இதனை செய்வதால்எந்த விதத்திலும் இறந்தவர்களின் இறை நம்பிக்கையை இது பாதிக்காது’’ என அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

Comments