கோவில் திருவிழாவில் பள்ளி மாணவன் கொலை

 கொழிஞ்சாம்பாறை, ஏப். 16- கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வன்னி கொன்னு பகுதியை சேர்ந்தவர் அம்புலிகுமார். இவரது மகன் அபிமஞ்சு (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று (15.4.2021) அந்த பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவி லில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அபிமஞ்சு கோவிலுக்கு சென்றார். தனது நண்பர்களுடன் அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத சிலர் வந்தனர். அவர்கள் அபிமஞ்சுவின் அருகில் சென்று திடீரென அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அபி மஞ்சுவின் வயிற்று பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அபிமஞ்சு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். அவரது நண்பர்கள் இதுகுறித்து ஆலப்புழா காவல்துறையி னருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

வளிமண்டல சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப். 16- வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய் யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை நிலையம் சார்பில் அறிவிக்கபட்டு உள்ளது.

அதுபோல்  இந்திய வானிலை ஆய்வு மய்யம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வருகிற 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தெலங்கானா, ஒடிசா, கருநாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் கணித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 11 சென்டி மீட்டர் மழையும்,  சேலம் மாவட்டம் எடப்பாடியில் 8 செ.மீ மழையும், ஆரணி, சோலையார் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மும்பையில் சொகுசு விடுதிகள் கரோனா சிகிச்சை மய்யங்களாக மாற்றம்

மும்பை, ஏப். 16- மும்பையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சொகுசு விடுதிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் கரோனா பெருமளவில் பரவி வருகிறது. அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தனியார் மருத்துவமனைகள் சொகுசு விடுதிகளை கரோனா சிகிச்சை மய்யங்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. லேசான அறிகுறிகள் உடைய நோயாளிகள் சொகுசு விடுதிகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை யளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

சொகுசு விடுதிகளில் நோயாளிகள் தங்குவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக அறை ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக் கலாம் என்றும் மருத்துவ சேவைகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments