கெட்டபின் ஞானமோ!

கும்பமேளா நிகழ்ச்சிகளைக் குறைக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப். 19 கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கும்பமேளா நிகழ்ச் சிகளைக் குறைக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி யுள்ளார்.

உத்தரகாண்டின் அரித்துவாரில் கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜனவரி மாத மத்தியில் இருந்து ஏப்ரல் வரை கும்பமேளா நிகழ்வு நடைபெறும். நடப்பாண்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அது ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டது.

அதையடுத்து, கும்பமேளா கடந்த

1-ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளான இரு புனித நீராடல்களும் நிறைவடைந்துவிட்டன. கும்பமேளாவில் பங்கேற்ற துறவிகள் பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கும்பமேளா நிகழ் வுகளைக் குறைக்க வேண்டுமென்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், ‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துறவிகளின் உடல்நலம் குறித்து சுவாமி அவதேஷானந்தாவிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தேன். கும்பமேளா நிகழ்ச்சியை நடத்துவதில் உள்ளூர் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதற்காகவும் பாராட்டு தெரிவித்தேன்.

கும்பமேளாவில் இரு புனித நீராடல்கள் நிறைவடைந்துவிட்டன. கரோனா நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இனி நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளைப் பெயரளவுக்கு மட்டும் நடத்துமாறு வலி யுறுத்தியுள்ளேன். இது தொற்று பரவலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments