செய்தியும், சிந்தனையும்....!

கடவுள் சிலைகள்?

*           அனுமதியின்றி நடைபாதைகளில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றுக!

- மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு 

>>           விதி விலக்கு இல்லாமல் அத்தனை கடவுள் சிலைகளும் அகற்றப்படுமா?

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

*           மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி

- மத்திய அரசு அறிவிப்பு

>>           நல்ல முடிவு - தடுப்பூசி தயார்தானே?

காசோலைகளா - புஸ்வாணங்களா?

*           விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடாக அளிக்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பணமின்றி பவுன்ஸ் ஆகியிருக்கின்றன.   

>>           நம்பகத்தன்மை அரசிடமே இல்லையே!    

தக்காளி விலை போகவில்லையோ!

*           கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சத்தீஸ்கரில் 2 கிலோ தக்காளி இனாம்!

>>           பொதுவாக இலவசம் என்றாலே மக்கள் அவற்றை அலட்சியமாக நினைக்கும் மனப்பான்மை...!

எதில் முதலிடம்?

*         கரோனா தடுப்பூசி அதிகம் வீணாகும் மாநிலப் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்     

>>           எதிலாவது முதலிடம் கிடைத்தால் சரி தானோ!

சட்டத்தில் சந்து பொந்துகள்!

*          தனியாக வசிப்பதாகக் கூறி கணவனின் பெற்றோர் வரதட்சணை வழக்குகளில் தப்பித்து வருகின்றனர் - உயர்நீதிமன்றம் வேதனை  

>>           இதை எல்லாம் சொல்லிக் கொடுப்பவர்கள் யார்? சில வழக்குரைஞர்களா?

நடப்பது மன்னராட்சியா?

*          ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாத் நாட்டின் அதிபர், கிளர்ச்சிக்காரர்களுடன் நடந்த சண்டையில் பலி!   

>>           களத்தில் நின்று சண்டை போட்டாரா?

ஆறுதல் அளிக்கிறது

*          கரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வழங்கிட அமெரிக்க நிறுவனங்கள் மறுப்பு

- மறுபரிசீலனை செய்வதாக அதிபர் ஜோபைடன் கருத்து

>>           உயிர்க் காக்கும் விடயத்தில் கூட வியாபாரத் தந்திரமா?

Comments