தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகின்றனர்?

 உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஏப். 9 தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 3 ஆண்டுகளில் எத் தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளனர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத் தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 2018ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, வில்லிவாக் கம் சார்பதிவாளர் கோபால கிருஷ்ணன், தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், 2019ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில், லஞ்சம் மற் றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணனை, செங் கல்பட்டு மாவட்ட சார் பதி வாளராக நியமனம் செய்தது.

இந்த இடமாற்றமானது சட்ட விதிகளுக்கு புறம்பா னது என்றும், லஞ்சம் பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளதாகவும், இட மாறுதல் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என் றும் சென்னை உயர்நீதிமன்றத் தில் கருப்பு எழுத்து கழகம் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதி பதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் விஜயேந்திரன் ஆஜராகி வாதிட்டார்

பின்னர் நீதிபதிகள், ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது. ஊழல் காரணமாக நில அபகரிப் புகள் நடக்கிறது. நீர் நிலைகள் போன்ற இயற்கை வளங்கள் காணாமல் போகின்றன. இதை தடுக்க வேண்டும். ஊழ லினால் மிகவும் பாதிக்கப் படுவது பொது மக்கள் தான். எனவே, தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எப்படி செயல்படுகின்றனர்? அரசி யல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந் திரமாக செயல்படுகின்றனர்? கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்  டுள்ளனர்? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக் கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசார ணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 

Comments