ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·   கரோனா அச்சுறுத்தல் சூழலை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரமும், தனியார் நிறுவனங்கள் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய ஏதுவாக கட்டாய உரிம முறையை ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகளை தெரிவித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

·     அசாமில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறலாம் அல்லது தோல்வியடையலாம். மேற்கு வங்கத்தில், பிரிக்கப் படாத வங்காளத்தில் பரவலுக்கு முந்தைய வகுப்புவாத அரசியல் இருந்தபோதிலும், மாநிலத்தின் கட்டமைப்பு ஒப்பனை காரணமாக அதன் வாய்ப்புகள் அசாமை விட குறைவான பிரகாசமாகக் கருதப் படலாம். ஆனால் ஒரு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது தற்போது முக்கியம் அல்ல. பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பல மாநிலங்களில் கைப்பற்றியதை நாம் பார்த்தோம் என மூத்த பத்திரிக்கையாளர் ஆனந்த் கே.சகாய் குறிப்பிட்டுள்ளார்.

·     குஜராத் மருத்துவமனைகளில் கரோனா தொற்று நோயாளிகளை அனுமதிக்க போதிய இருக்கைகளும், சுகாதார கட்டமைப்பும் இல்லை என அம்மாநில துணை முதல்வர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

·     அரசு வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவில் முதல் வங்கியாக பாங்க் ஆப் மகாராட்டிரா இருக்கும் என செய்திகள் வந்துள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     தமிழ் நாட்டில் நாளை ஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 4 மணி வரையிலும், அதேபோல் ஞாயிறு அன்று முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்திட தமிழக அரசு முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கடந்த வாரம் அவமானத்தின் இரண்டு மாறுபட்ட காட்சிகள் இந்தியாவைத் தாக்கியது. ஒன்று, அகமதாபாத்தில் இடுகாட்டில் இடம் இல்லாத அளவில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். மற்றொருபுறம், கும்ப மேளாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். இதைப் பற்றி பிரதமர் மோடி எந்த கவலையும்படவில்லை என மூத்த எழுத்தாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

·     கோவிட் -19 க்கு எதிரான முயற்சியை தவறாக நிர்வகித்ததற்கு நரேந்திர மோடி பிரதமர் பதவியலிருந்து விலக செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா கோரியுள்ளார்.

·     பொதுத்துறை வங்கிகள் மற்றும் இலாபம் தரும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.அய்.சி)  பகுதியளவு விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ள நிலையில், மோடி  அரசின் தனியார்மயமாக்கல் கொள்கை தடுக்கப்பட வேண்டும் என  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பொருளாதார வல்லுநரும் பேராசிரியருமான பிரபாத் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

19.4.2021

Comments