வடசென்னையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

சென்னை, ஏப்.17 அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்தநாளான 14.4.2021, காலை 8 மணிக்கு வடசென்னை மாவட்டக் கழக சார்பில், செம்பியம் - கோபாலபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செம்பியம் கழக தலைவர் பா.கோபால கிருட்டிணன் மாலை அணிவித்தார்.

வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், செம்பியம் கழக செயலாளர் டி.ஜி.அரசு, என்.டி.சீனிவாசன், டி.ஜி.கோபிநாத், ஜெ.பாஸ்கர், மு.இரத்தினம் மற்றும் கழகத் தோழர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Comments