இந்த பார்ப்பனர் "கொழுப்பு" - அடங்குமா, அடக்கப்படுமா?

கேள்வி: சென்னையில் .வெ.ராமசாமி சாலை பெயர் மாற்றம் செய்துள்ளதை தி.மு.. தலைவர் ஸ்டாலின் கண்டித்ததும், மே 2ஆம் தேதிக்குப் பிறகு பெயர் மாற்ற ஆணை வரும் என்றும் கூறியுள்ளது பற்றி?

பதில்: உண்மையாகக் கொள்கை அடிப்படையில் .வெ.ரா. சாலைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்றால், ‘காட்டுமிராண்டித் தமிழர்கள் சாலைஎன்றுதான் ஸ்டாலின் வைக்க வேண் டும். ஸ்டாலின் உள்பட யாருக்கும் .வெ.ரா.வின் தமிழ்க் கொள்கை மீது பற்றில்லை. அவர் பெயர் மீதுதான் பற்று.   - ‘துக்ளக்', 5.5.2021 பக். 27

தமிழின உணர்வோடு விளையாடிப் பார்க்கின்றனர் பார்ப்பனர் என்பதற்கு இது மேலும் ஓர் எடுத்துக்காட்டே! பெரியார் என்று சொன்னால் காஞ்சி மடத்திலிருந்து "மன்னிப்புப் புகழ்  குருமூர்த்திப் பார்ப்பனர் வரை" குருதி கொதிப்பேறுகிறது.

தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லாம் கண்டித்த ஒரு முக்கியப் பிரச்சினையை கொச்சைப்படுத்துவதும், திசை திருப்பும் திமிரும் அடங்கவில்லையென்றால்... அடக்கப் பட வேண்டாமா?

ஏதோ பெரியாரை மட்டுமல்ல; அண்ணா, காமராசர் பெயரில் உள்ள சாலைகளின் பெயர்களும் மாற்றப்பட்டு உள்ளன.

அவற்றிற்கும் சேர்த்துத்தான்துக்ளக்'கின் பதில்' என்பது தமிழர்களுக்கு நினைவிருக்கட்டும்!

ஏற்கெனவே மதுக்கடைகளைத் திறந்த முதல் அமைச்சர்களை செருப் படிக்கு மேல் மோசமான அடியைக் கொடுக்க வேண்டும் என்று (துக்ளக், 22.7.2020, பக். 22) குருமூர்த்தி எழுதிய போதும் - இவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களை எதால் அடிப்பது என்று எழுதிய போதும், ரஜினிகாந்த் அரசிய லுக்கு வரவில்லை என்றால் ஏதோ ஒரு கழுதை ஆட்சிக்கு வரும் என்று கழுதைப் படம் போட்டு எழுதிய போதும் தமிழர்கள் அமைதியாக இருந்த காரணத்தால் கைபர்களின் கொழுப்பு கண் மூடித்தனமாக எகிறிக் குதிக்கிறது!

தமிழினத் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழை நீஷப்பாஷை என்று கூறும் காஞ்சிகுச்சிமனிதர்களைத் தலையில் தூக்கி ஆடும் கும்பல் - தந்தை பெரியாரின் கருத்தைத் திசை திருப்பும் தகிடுத் தத்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்!

Comments