வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதியின் வாக்காளர் எழுதிய கடிதம்

கோவையில் உத்தரப்பிரதேச முதல் வர்  யோகி ஆதித்தியநாத் அவர்கள் வந்த போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை  "ஒரு சின்ன சம்பவம், அதை ஊதிப் பெருசாகக் காட்டுகிறார் கள்" என்று நீங்கள் கூறியதை பார்த் தேன், ஒரு நிமிடத்தில் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

நீங்கள் வாக்கு சேகரிக்க வரும்போது கூறிய உங்கள் வீட்டு பிள்ளை, ஏங்க நான் உங்க அக்கா மாதிரி, உங்க அம்மா மாதிரி, உங்க அண்ணி மாதிரி என்று ஒவ்வொரு வரிடமும் கூறியதை பார்த்து எங்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணினோம். உங்களிடம் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். எங்கள் குடும்பத்தில் யாரும் அடுத்தவர் கடை மீது அதுவும் மாற்று சமூகத்தினர் கடைகள் மீது கல் எறிவதை சின்ன சம்பவம் என்று கூற மாட்டார்கள்.

கோவையில் இதற்கு முன்பு நடந்த வற்றை நாங்கள் நன்கு அறிவோம், கோவையில் இப்படித்தான் சிறுபான் மையினர் கடைகளுக்கு தீ வைத்தார்கள், எங்கள் வீட்டின் அருகில் இருந்த மளிகை பொருட்கள் வாங்கும் பாய் கடை எப்படி எரிந்தது, அந்த பொருட் களை எப்படி சூறையாடி சென்றார்கள் என்பதை எல்லாம் சிறு வயதில் பார்த் தவன் நான்Shoba Corner கோவையில் இருந்த யாரும் மறக்க முடியாத ஒன்று - அது தீ வைத்து கொளுத்தப்பட்டது, இன்றும் அதன் வாசலில் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வாகனத் தில் கூட்டமாக நின்றதை பார்த்து பழைய நிலைக்கு கோவை சென்று விடுமோ என்ற பயம் தான் வந்தது. அதற்கு பின்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் கோவை தன்னுடைய அமைதியை, வளர்ச்சியை இழந்தது. தற்போது தான் இதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறோம்.

கோனியம்மன் கோவில் தேரோட் டம் அதே வழியில் தான் வந்தது. அப் போது எல்லாம் எந்த சலசலப்புகளும் இல்லை, இஸ்லாமியர்கள் கூட பல இடங்களில் தண்ணீர், 'ஜூஸ்' என்று கொடுத்தார்கள். அது எப்படி உங்கள் ஆட்கள் வந்தால் மட்டும் கலவரம் ஏற்படுகிறது? இந்து - இந்துத்துவா வேறுபாடு இது தானா ?

கோவையின் அமைதியை யார் கெடுக்க நினைத்தாலும் இங்கு இருக்கும் இந்துக்கள் கண்டிப்பாக பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். நாங்கள் மசூதியில் தாயத்தும் கட்டு வோம், மாதா கோவிலுக்கும் செல்லு வோம். இஸ்லாமிய தோழர்களும் எங் களோடு அப்படித்தான் பழகுகிறார்கள்.

தயவு செய்து கோவையின் வளர்ச் சியை, அமைதியை மீண்டும் கெடுத்து விடாதீர்கள்.

இப்படிக்கு,

கோவை தெற்கு தொகுதியின் வாக்காளர்

Comments