இரவு நேர ஊரடங்கு நாடகம் ஏன்?

கருநாடக அரசுக்கு, சித்தராமையா கேள்வி

பெங்களூரு, ஏப்.11 கரோனா பரவலை கட்டுப்படுத்துவதாக கூறி இரவு நேர ஊரடங்கு நாடகத்தை அரங்கேற்றுவது ஏன்? என்று கருநாடக அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

கருநாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தரா மையா நேற்று  (10.4.2021) வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியிருப்ப தாவது;-

நாடகத்தை அரங்கேற்றுவது...

  கர்நாடகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது. தற்போது கரோனா பரவலை காரணம் காட்டி இரவு நேரத்தில் ஓட்டல்களை திறக்கவும், தியேட்டர் களை மூடவும், கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா பரவல் கட்டுக்குள் வருமா?. இரவு நேர ஊரடங்கு 8 நகரங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கரோனா பரவலை காரணம் காட்டி இரவு நேர ஊரடங்கு என்ற நாடகத்தை அரசு அரங்கேற்றுவது ஏன்?.

 கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நினைத்திருந்தால், தொடக்கத்திலேயே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். கரோனா பரவலை தடுக்க பரிசோத னையை முதலில் அதிகரிக்க வேண்டும். கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

தடுப்பூசி பற்றாக்குறை

  கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி 80 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை. தற்போது கூட மாநிலத்தில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக இருப்ப தாக புகார்கள் வருகின்றன. இதுபற்றி முதல் அமைச்சர் எடியூரப்பா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கரோனா விவ காரத்தில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது.

முதல் அமைச்சர் எடியூரப்பா உத்தரவை சில மாவட்ட ஆட்சியர்கள் சரியாக பின்பற்றுவ தில்லை என்ற குற்றச்சாட்டு களும் வருகின்றன. சில ஆட்சியர்கள் துக்ளக் தாபார் நடத்து கிறார் கள். அந்த ஆட்சியர்களுக்கு, முதல் அமைச்சர் எடியூரப்பா சரியான பாடம் புகட்ட வேண்டும். நீங்களும் (எடியூரப்பா) இந்த விவகாரத்தில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

Comments