ஆசிரியர் தேர்வில் குளறுபடி: 9 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை

சென்னை, ஏப். 12- ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக கூறப்படும் நிலையில், தேர்வு வாரிய தலைவர் பதவி வகித்த 9 அய்..ஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முது கலை ஆசிரியர் தேர்வு, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளின் போது, தாங்கள் சரியாக எழுதிய விடைகளை தவறு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்ததாக, தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கவுதமன், லட்சுமிகாந்தன், அசோக்குமார், தாமோதரன் மற்றும் சிமியோன் ஆகிய 5 பேர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து மாநில தகவல் ஆணையம், விரிவான விசாரணை நடத்தி யது. இந்நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைவர் முத்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகளில் வெளிப் படைத்தன்மை இல்லை என்றும், அந்த வாரியத்தில் தலைவர் பதவிகளை வகித்த வர்கள் பொறுப்பின்றி செயல்பட்டிருப் பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.

மேலும் 2011-ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பல தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல் லாமல், பல்வேறு குளறுபடிகள் இருப்ப தாக மாநில தகவல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அதன் அடிப்படையில் 2011 முதல் கடைசியாக பதவி வகித்த லதா வரை ஒன்பது அதிகாரிகளை கட்டாய ஓய் வில் அனுப்ப வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தேர்வர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அலைக்கழித்திருக்கிறது என்றும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவிகளை வகித்த அய்ஏஎஸ் அதிகாரிகள் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர், ஜெகன்நாதன், சிறீனிவாசன், நந்த குமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 அய்ஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் பணியில் இருந்து அனுப்ப வேண் டும் என்றும் தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த ஒன்பது பேரில் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர் தவிர்த்து மற்ற ஏழு அதிகாரிகளும் பணியில்  இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments