இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 97-ஆவது பிறந்தநாள் தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் வாழ்த்து பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து

இராஜகிரி, ஏப்.23 திராவிடர் கழகக் காப்பாளர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 97-ஆவது பிறந்தநாளான 23-04-2021 அன்று அவரது இராஜகிரி இல்லம் சென்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், மண்டல செய லாளர் .குருசாமி,தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராசு, தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி, நெய்வேலி வெ.ஞானசேகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், குடந்தை மாவட்ட அமைப்பாளர் .அழகுவேல், பாபநாசம் ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் கணேசன், திருவிடை மருதூர் ஒன்றிய செயலாளர் .முருகானந்தம், ஒன்றிய அமைப்பாளர் .சிவக்குமார், திருநாகேஸ்வரம் வழக்குரைஞர் சக்திவேல், சு.சாமிநாதன், மாவட்ட . துணைத்தலைவர் திருஞானசம்பந்தம், தஞ்சை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சடையார்கோவில் வெநாராயணசாமி தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர துணைச் செயலாளர் பழக்கடை கணேசன், குடும்ப விளக்கு நலநிதி நிர்வாகி வேணுகோபால்,உரத்தநாடு பெரியார்நகர் . உத்தி ராபதி, பாபநாசம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சரவணன், குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர், குடந்தை மாவட்ட துணைத் தலைவர் வலங்கை கோவிந்தன், கபிஸ்தலம் கைலாசம். பாபநாசம் கு..ஜெயராமன், பாபநாகம் நகர துணைத் தலைவர் நாகராசன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். இராஜகிரி கோ.தங்கராசு  அவர்களின் மகன் பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க பூவானந்தம், மருமகள் மதுரவள்ளி ஆகியோர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்,

மரக்கன்று

நடுதல்

இராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் 97 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக லெனின்பாஸ்கர், நாகராசன் ஆகியோர் பாபநாசம் நகரத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

Comments