தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தினசரி கரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது

 சென்னை, ஏப்.15 தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று (14.4.2021) ஒரே நாளில் 7,819 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி 6,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே இதுவரை பதிவான தின சரி பாதிப்பில் அதிக எண்ணிக் கையாக இருந்து வந்தது. இந் நிலை யில் நேற்று தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண் ணிக்கை

7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97,668 கரோனா மாதி ரிகள் பரிசோதனை செய்யப் பட்டதில், 7,819 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,54,948 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால்,  தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவில் இருந்து இதுவரை 8,87,663 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். நேற்று மட்டும் 3,464 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத் தில் கரோனாவால் நேற்று 25 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,970 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று மேலும் 2,564 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது 54,315 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comments