மொழிப்போர் தளபதி எல்.கணேசன் 87ஆவது பிறந்தநாள் தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் வாழ்த்து

தஞ்சை,ஏப்.25- தி.மு. தலைமை தேர்தல் பணிக்குழு தலைவர், மொழிப்போர் தளபதி, நாடாளுமன்ற இரு அவைகளின் முன்னாள் உறுப்பினர், சட்ட மன்ற மேனாள் உறுப்பினர், தமிழக சட்டமேலவை மேனாள் உறுப்பினர் திராவிட இயக்க சிந்தனை யாளர் எல்.கணேசன் அவர்களின் 87 ஆவது பிறந்த நாளில் (24-.4.-2021) எல்.கணேசன் அவர்களிடமும் அவரது வாழவிணையர் திருமதி கமலாகணேசன் அவர்களிடமும்  திராவிடர் கழகத் தலைவர் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தார்கள்.

வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த இருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உடல் நலமும், பாது காப்பும் முக்கியம் பாதுகாப்புடன் இருந்து அனை வருக்கும் வழிகாட்டிடவேண்டும் என தெரிவித்த துடன் மோகனா அம்மையார் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் நலம் விசாரித்து மகிழ்ந்தனர்.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் கோபு.பழனிவேல், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக் குமார், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் ஆகியோர் எல். கணேசன் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார் பில் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Comments