கரோனா தொற்று: தமிழகத்தில் 8,449 பேர் பாதிப்பு

சென்னை, ஏப்.17 தமிழகத்தில், கரோனா தொற்றால், நேற்று (16.4.2021) ஒரே நாளில், 8,449 பேர் பாதிக்கப் பட்டனர். நேற்று  இறந்த 33 பேர் உட்பட, 13 ஆயிரத்து, 32 பேர், இதுவரை இறந்துஉள்ளனர்.

இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 263 கரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 97 ஆயிரத்து, 201 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 2,636; செங்கல்பட்டில், 795; கோவையில், 583; திருவள்ளூரில், 453 என, மாநிலம் முழுதும், 8,449 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள் ளது. இதுவரை, 2.09 கோடி மாதிரிகள் பரிசோதனையில், ஒன்பது லட்சத்து, 71 ஆயிரத்து, 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடித்து நேற்று, 4,920 பேர் உட்பட, எட்டு லட்சத்து, 96 ஆயிரத்து, 759 பேர் வீடு திரும்பிஉள்ளனர்.

தற்போது, சென்னையில், 22 ஆயிரத்து, 420; செங்கல்பட்டில், 5,850; கோவையில், 4,402 பேர் என, மாநிலம் முழுதும், 61 ஆயிரத்து, 593 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றால் நேற்று, 33 பேர் உட்பட, இதுவரை, 13 ஆயிரத்து, 32 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments