கரோனா கட்டண வசூலிப்பை தடுக்க 70 தணிக்கையாளர்கள்

 மும்பை, ஏப்.18 நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தனியார் மருத்துவமனை களை கண்காணிக்க மாநகராட்சி 70 தணிக்கையாளர்களை நியமித்து உள்ளது. மராட்டியத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தலைநகர் மும்பையிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து மும்பை மாநக ராட்சி நகரில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 35 தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்களை நியமித்து உள்ளது. இவர்கள் தனியார் மருத் துவமனை நிர்வாகம் நோயாளி களிடம் சரியான கட்டணத்தை வசூலிக்கிறார்களா என்பதை கண் காணிக்க வேண்டும். மேலும் அதிக கட்டணம் குறித்து நோயாளிகள் புகார் அளித்தால் அதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல தனியார் மருத்துவ மனைகளில் படுக்கைகள் முறையாக ஒதுக்கப்படுகிறதா என்பது குறித் தும் கண்காணிக்க வேண்டும்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளில் உள்ள 80 சதவீத படுக்கைகள் மாநகராட்சி மூலம் தான் நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும். எனவே தனியார் மருத்துவமனைகள் காலியாக உள்ள படுக்கைகள் குறித்து உட னுக்கு உடன் மாநகராட்சி தகவல் அளிக்க வேண்டும் என்றார்.

இதேபோல 70 தணிக்கையாளர் களையும் வழிநடத்த 2 சிறப்பு அதி காரிகளையும் மாநகராட்சி நிய மித்து உள்ளது.

 

Comments