மியான்மாவில் ராணுவத்துக்கு எதிரான போராட்டம்: இதுவரை 701 பேர் பலி

பாகா, ஏப். 14- மியான்மாவில் ராணுவத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 701 பேர் கொல் லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அனடோலு செய்தி நிறுவனம் வெளியிட் டுள்ள செய்தியில், மியான்மா வில் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. பாகாவில் வெள் ளிக்கிழமை நடந்த போராட் டத்தில் 80க்கும் அதிகமானவர் கள் பலியாகி உள்ளனர். இது வரை மியான்மாவில் நடந்து வரும் போராட்டத்தில் 701 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3,021 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

மியான்மாவில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத் தது. ஆனால், தேர்தலில் முறை கேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணு வம் மறுத்தது.

இதுதொடர்பாக மியான்மா அரசுக்கும் ராணு வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணு வம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மாவின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கி யத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மா நாட்டில் தற் போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப் படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட் சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப் பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன் படுத்தி வருகிறது.

Comments