மேற்கு வங்கத்தில் பாரதீய ஜனதா 70 இடங்களில்கூட வெற்றி பெறாது:மம்தா

கொல்கத்தா, ஏப்.15 மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 70 இடங்களில்கூட வெல்ல முடியாது. ஆனால், பிரதமர் மோடியோ 4 கட்டத் தேர்தலிலும் 100 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறுகிறார் என்று திரிணாமுல் காங் கிரஸ் தலைவர் மம்தா கிண்டல் செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதி களுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 4 கட்டங்களில் 135 தொகுதிகளுக்குத் தேர்தல் முடிந்தது.

இந்நிலையில் 5 ஆவது கட்டத் தேர்த லுக்காக ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தாப்கிராம்-ஃபுல்பாரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா நேற்று (14.4.2021) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

‘‘மேற்கு வங்கத்தில் இதுவரை 4 கட்டங் களாக 135 தொகுதிகளுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 135 தொகுதிகளில் 100 தொகுதிகளைக் கைப்பற் றுவோம் என பிரதமர் மோடி தெரிவிக்கிறார். நான் சொல்கிறேன். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின்போது பாருங்கள், பாஜக 294 இடங்களில் 70 இடங்களில்கூட வெல் லாது.

ஒரே பிரச்சினையைப்பற்றி பல்வேறு இடங்களில், பல்வேறு விதமாக பொய்யான பிரச்சாரத்தை பாஜகவும், அதன் தலைவர் களும் முன்னெடுக்கிறார்கள். டார்ஜிலிங் பகுதியில் உள்ள லேபாங் பகுதியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, என்ஆர்சி கொண்டுவர மாட்டோம் என்கிறார்.

ஆனால், 14 லட்சம் மக்களை அடை யாளம் கண்டுவைத்துள்ள மத்திய அரசு, அவர்களைத் தடுப்பு முகாமுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறது. இந்த 14 லட்சம் பேரை யும் என்ஆர்சி சட்டத்தில் சட்டவிரோத அகதிகள் எனக் கூறி முகாமுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் உங்களை அச்சுறுத்தும், சர்ச்சைக்குரிய என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவர அனுமதிக்காது. நீங்கள் அனை வரும் குடிமக்கள். என்னுடைய வேண்டு கோள், நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதி கரித்தபோது பல்வேறு மாநிலங்களில் இருந்த மேற்கு வங்க மக்களை என்னுடைய அரசுதான் செலவு செய்து சொந்த மாநிலத் துக்கு அழைத்து வந்தது. ஆனால், எந்த பாஜக தலைவரும் இதற்கு உதவவில்லை. அப்போது வெளியே வரவில்லை.

பாஜக என்பது மக்கள் விரோதக் கட்சி. ஏழைகளுக்கு எதிரான கட்சி. ஏழைகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துதான் உணவுப் பொருள்கள் விலை உயர்வுக்கு அனுமதிக் கிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை அனுமதிக்கிறது. சமையல் எரிவாயு சிலிண் டர் விலையை விண்ணளவுக்கு உயர்த்து கிறது.’’. இவ்வாறு மம்தா கூறினார்.

Comments