70 சதவீத ஆம்னி பேருந்துகள் ரத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

சேலம், ஏப்.15 கரோனா வால், பயணியர் வருகை சரிவால், 70 சதவீத ஆம்னி பேருந்துகளின் இயக்கம் நிறுத் தப்பட்டது.

தமிழகத்தில், 3,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படு கின்றன. கரோனாவால், 2020 மார்ச் முதல், கடந்த ஜனவரி முதல் வாரம் வரை இயக்கம் நிறுத்தப்பட்டது.

கரோனா கட்டுக்குள் வர, ஜன., 10 முதல், பேருந்துகள் இயங்கத் தொடங்கின.தற் போது இரண்டாம் கட்ட கரோனா அலையால், மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அய்.டி., உள் ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள், வரும் டிசம்பர் வரை, வீடுகளில் இருந்து பணிபுரிய ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளன.

கல்லுரிகளும் மூடப்பட்டு, இணையதள வகுப்பு நடத்தப் படுகிறது. இதனால் ஆம்னி பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை சரிந்துள்ளது.

இதனால் வருவாய் இழப்பை தவிர்க்க, ஏப்ரல் - ஜூன், காலாண்டு கால வரி செலுத்தி, அனுமதி புதுப்பிப் பதை உரிமையாளர்கள் நிறுத்தி விட்டனர்.

நேற்றைய(14.4.2-021) நிலவரப்படி, தமிழகத்தில், 900 ஆம்னி பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.

2,100 பேருந்துகள் (70சத வீதம்) நிறுத்தப்பட்டுள்ளதால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் வேலையை இழந்துள்ளனர்.

இதுகுறித்துஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியதாவது: ஆம்னி பேருந்து களுக்கு வருவாய் ஏப்ரல் முதல் ஜூன், பொங்கல் விழாக் காலங் கள்தான். அந்த வருவாய் மூலம்தான், ஆண்டு முழுவதும் பேருந்துகளை இயக்க முடியும்.

கடந்த ஆண்டே ஊரடங் கால், இயக்கம் முடங்கி, வருவாய் இழப்பு ஏற்பட்டது.தற்போது கரோனா இரண் டாம் அலையால், பயணியர் எண்ணிக்கைசரிந்து

விட்டது.

பேருந்துகளை இயக்கி னால், டீசலுக்கு கூட வருவதில்லை. ஒரு பேருந்துக்கு மாதம், மூன்று லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதால், பெரும்பாலான ஆம்னி பேருந் துகள்நிறுத்தப்பட்டு

விட்டன.

இவ்வாறுஅவர்கள் கூறினர்.

Comments