6 கோடி யூனிட்கள் சரிந்ததால் அனல் மின் உற்பத்தி குறைப்பு

சென்னை, ஏப்.18 கோடை மழையால் மின் நுகர்வு 6 கோடி யூனிட்கள் சரிந்த தால் மின் வாரியம் அனல் மின் உற் பத்தியை குறைத்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து பிரிவுகளுக் கும் மின் வினியோகம் செய்யும் பணியை மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. தமிழகம் முழுதும் 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது.தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு கோடை வெயில் சுட்டெரிப்பதால் 36   கோடி யூனிட்களை தாண்டியது.இம்மாதம் 9ஆம் தேதி எப் போதும் இல்லாத அளவாக 37.27 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.

இந்நிலையில் சில தினங்களாக பல மாவட்டங்களில் கோடை மழை பெய் தது. அதனால் 13ஆம் தேதி 35.57 கோடி யூனிட்களாக இருந்த மின் நுகர்வு 14ஆம் தேதி 33.02 கோடி யூனிட்; 15ஆம் தேதி 30.89 கோடி யூனிட்களாக சரிந்து வரு கிறது.ஒரு வாரத்தில் மட்டும் நுகர்வு 6 கோடி யூனிட்கள் சரிந்து தற்போது இயல்பான அளவில் உள்ளது.

இதனால் 4320 மெகா வாட் திறன் உடைய அய்ந்து அனல் மின் நிலையங் களில் தினமும் 3000 மெகா வாட்டிற்கு மேல் மின் உற்பத்தி செய்து வந்த நிலை யில் மின் வாரியம் நிலக்கரியை மிச்சப் படுத்தும் வகையில் 2400 மெகா வாட் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது.

Comments