மூடநம்பிக்கையில் மூழ்கிய பெற்றோரால் 6 மாத குழந்தை நரபலியிடப்பட்ட கொடூரம்!

திருமலை,ஏப்.17- தெலங்கானா மாநிலத்தில் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு பெற்றோரே தங்களின் 6 மாத குழந்தையை மூடநம்பிக்கை காரணமாக நரபலி கொடுத்துள்ளனர்.

 சூரிய பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது 2ஆவது  மனைவி புஜ்ஜி. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை இருந்தது. புஜ்ஜி உடல் நலக்குறைவு, மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். கிருஷ்ணா, தனக்கு தெரிந்த ஜோசியர் ஒருவரிடம் நிவா ரணம் கேட்டார்.

அதற்கு அந்த ஜோதிடர், ‘உங்கள் மனைவிக்கு நாக தோஷம் உள்ளது. குழந்தையை பலி கொடுத்தால் நாக தோஷம் அகன்றுவிடும்,’ என கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணாவும், புஜ்ஜியும் தங்கள் வீட்டில் ஜோதிடரின் அறிவுரைபடி பலி பூஜை நடத்தினர்.

அப்போது, தனது 6 மாத கைக்குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்தார். குழந் தையை பூஜையில் வைத்து மந்திரங்கள் கூறியுள்ளனர். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை. திடீரென குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டு, சிறிது நேரத்தில் அடங்கியது. அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் வெள்ளத்தில் இறந்து கிடந்தது. கிருஷ்ணாவையும் புஜ்ஜியையும் தெலங் கானா மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

Comments