ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி

மேட்ரிட், ஏப். 9 ஸ்பெயின் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசி இன்று உலக அளவில் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனமும் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் அய்ரோப்பிய நாடுகளில் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்த அய்ரோப்பிய யூனியனின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, சுமார் 34 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதில் 169 பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக பதிவு செய்துள்ளது. மேலும் 60 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கே இந்த பிரச் சினை அதிக அளவில் ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறி யுள்ளது. இத னைத் தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்திக் கொள் வதற்கு பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அந்த வகையில் ஸ்பெய்ன் நாட்டில், இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா டரியாஸ், ஏற்கெனவே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்களுக்கு 2ஆவது டோஸ் வழங்கப்படுமா? என்பது குறித்து இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து தற்காலிக தடை

வெலிங்டன், ஏப். 9- இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இங்கிருந்து நியூசிலாந்து நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன். ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்குக் கரோனா தொற்று உறுதி யானது. கடந்த ஆண்டைவிட கரோனா 2ஆவது அலையில் தொற்று வேகமாகப் பரவுகிறது. இளைஞர்கள் அதிகமான அள வில் பாதிக்கப்படுகிறார்கள் என டில்லி லோக்நாயக் மருத்துவ மனையின் இயக்குநர் மருத்துவர் சுரேஷ் குமார் தெரிவித்தார். 2ஆவது அலையில் நோய்ப் பரவலின் வேகம் அதிகமாக இருக் கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதிப்பும் அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து நாடு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடை இந்தியா வந்துள்ள நியூசிலாந்து நாட்ட வருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் ஜெசிந்தா இந்த உத்தரவு பற்றி தெரிவித்தார். மேலும், இந்த காலகட்டத்தில் கரோனா பரவல் அபாயத்தைத் தடுப்பது குறித்து ஆராய்ந்து பின்னர் பயணத் தடையை விலக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் சிறப்பாகச் செயால்பட்டதன் காரணமாக உலக நாடுகளால் பாராட்டப்பட்டார். இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமா கவே தேர்தலில் ஜெசிந்தா மாபெரும் வெற்றியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments