வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா!

2021 செப்டம்பர் மாதம் வடஅமெரிக்காவில் 60 திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படுகிறது. அச்சிலைகளின் வழியனுப்புவிழா 9.4.2021 அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை, அடையாறு, சத்யா ஸ்டுடியோ (எம்.ஜி.ஆர். ஜானகி  கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அரங்கத்தில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கவிப் பேரரசு

பத்மசிறீ வைரமுத்து அவர்கள் மற்றும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கத் தலைவர் கால்டுவெல் வேள் நம்பி அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விழாவிற்கு அனைவரையும் வருகை தரும்படி அன்புடன் அழைக்கின்றோம் என விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் தெரிவித்துள்ளார்.

Comments