ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.6 ஆயிரம் வழங்குங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும்

 சோனியா காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப்.18 கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது வரம்பை 25 ஆக குறைக்க வேண்டும். கரோனா கால நிவாரண மாக தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசை சோனியா காந்தி வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று (17.4.2021)  நடைபெற்றது. அதில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள், நிரந்தர அழைப்பாளர் கள், மாநில பொறுப்பாளர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:-

கரோனாவை எதிர்த்து போரிடு வதை தேசிய சவாலாக காங்கிரஸ் கருதுகிறது. இதை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எதிர்கொள்ள வேண் டும். அரசியல் எதிரியாக அல்லாமல், இந்தியர்களாக எதிர்கொள்வதுதான் நல்ல அரசுக்கு இலக்கணமாகும்.

அதனால்தான், கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதவாக்கிலேயே மத்திய அரசுக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிக்கத் தொடங்கினோம்.

முழு வீரியத்துடன் இரண்டாவது அலை இந்தியாவை தாக்கி இருப்பதை நாம் அலட்சியப்படுத்த முடியாது. நன்கு தயாராக ஓராண்டு அவகாசம் இருந்தபோதிலும் மத்திய அரசு தயாராகவே இல்லை.

எதிர்க்கட்சி தலைவர்கள் ஆக்க பூர்வமான யோசனைகள் சொன்னா லும், அதை காது கொடுத்து கேட்ப தற்கு பதிலாக, அவர்களை தாக்கு வதற்கு மத்திய அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டார்கள். இந்த நீயா? நானா? விவாதம் குழந்தைத்தனமானது. முற்றிலும் தேவையற்றது.

கரோனாவை பொறுத்தவரை அனைத்து வயதினரையும் தாக்குகிறது. எனவே, கரோனா தடுப்பூசி செலுத்து வதற்கான வயதுவரம்பை 45இல் இருந்து 25 ஆக குறைக்க வேண்டும். 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

குறிப்பாக, ஆஸ்துமா, இதயநோய், நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கரோனா பிரச்சினையில் சில மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு மவுனம் சாதிக் கிறது.

காங்கிரஸ் முதல் அமைச்சர் களுடன்  நான் ஆலோசனை நடத்திய போது, கரோனா சிகிச்சைக்கு தேவை யான உபகரணங்கள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த பொருட்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பது பெரும் கவலைக் குரியது.

தற்போது, கரோனாவை கட்டுப் படுத்த மத்திய, மாநில அரசுகள் பகுதிநேர ஊரடங்கு, பயண கட்டுப் பாடுகள், பொது முடக்கம் போன்ற வற்றை அறிவித்து வருகின்றன. இதனால், பொருளாதார நடவடிக் கைகள் முடங்கி மீண்டும் ஏழைகளும், தினக்கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே, அவர்களுக்கு மாத வருவாய் அளிப்பது அவசியம். தகுதி வாய்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கிக்கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

Comments