மத்தியப் பிரதேசத்தில் இன்று மாலை 6 மணி முதல் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு

போபால், ஏப்.9 மத்திய பிரதேசத்தில் இன்று (9.4.2021) மாலை 6 மணி முதல் வரும் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.

இதனால் பல மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி,

இந்தியா வில் முதல் முறையாக தினசரி கரோனா பாதிப்பு எண் ணிக்கை ஒரு லட்சத்தை தாண்

டியது. இன்றைய தினம் 1,26,789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், ஒருநாள் பாதிப்பு எண் ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த மராட்டிய மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.  மராட்டிய மாநிலத் தைத் தொடர்ந்து டில்லி, பஞ்சாப் மாநிலங்களிலும் கரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத் தில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி

வரை இரண்டு நாட்கள் நகரங்

களில் முழு ஊரடங்கு அமல்

படுத்தப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

மேலும் மருத்துவ நிபுணர் களுடன் ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டு, கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் பகுதிகளில், தகுந்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப் படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Comments