வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களில் தினமும் 5 முறை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை, ஏப். 8  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட் டுள்ள மய்யங்களில் தினமும் 5 முறை காவல்துறை அதி காரிகள் ஆய்வு செய்ய வேண் டும் என்று மாநில காவல் துறை இயக்குநர் ஜே.கே.திரி பாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முன்தினம் (6.4.2021) நடந்தது. தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்கு கள் 75 மய்யங்களில் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்புடன் எடுத்து வரப் பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மய்யங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு தொகுதிக்கும் தனித் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் கண் காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட் டுள்ளன. வாக்கு எண்ணும் மய்யங்களில் ஸ்டி ராங் ரூம் என்றழைக்கப்டும் அறையில்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங் கள்வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணு வப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஆயுதப் படை காவல்துறையினரும், வாக்கு எண்ணும் மய்யத்தின் நுழைவு வாயிலில் உள்ளூர் காவல்துறையினரும் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

அனைத்து வாக்கு எண் ணும் மய்யத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மய்யத் திலும் சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறை களில் உள்ள கண் காணிப்பு கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் எல்இடி திரையும் வைக்கப் பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மய்யங் களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அந்தந்த பகுதி காவல் துறை அதிகாரிகள் நேற்று (7.4.2021) காலையிலேயே நேரில் சென்று ஆய்வு செய் தனர். காவல் நிலைய ஆய் வாளர், டிஎஸ்பி, எஸ்.பி, டிஅய்ஜி, அய்ஜி, ஏடிஜிபி ஆகியோர் வாக்கு எண்ணும் மய்யங்களுக்கு சென்று பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என மாநில காவல் துறை இயக்குநர்  ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

குறைந்தபட்சம் ஒரு வாக்கு எண்ணும் மய்யத்தில் தினமும் 5 முறையாவது வெவ்வேறு காவல் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்க வேண்டும். ஸ்டிராங் ரூம் அறை பூட்டின் சீல் சேதம் அடையாமல் இருக்கிறதா, கண்காணிப்பு கேமரா காட்சிகள் சரியாக இருக்கிறதா, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள காவல் துறையினர் தங்களது பணி களை சரியாக செய்கிறார் களா, பாதுகாப்பு குறைகள் இருக்கிறதா என்பதை காவல் துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என மாநில காவல் துறை இயக்குநர் கே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments