5 புதிய கரோனா தடுப்பூசிகள் விரைவில் அறிமுகம்

 புதுடில்லி, ஏப். 12- நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித் துள்ள நிலையில், ஸ்பூட்னிக்-வி உள்ளிட்ட 5 புதிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலை யில், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தடுப்பூசிக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் தடுப்பூசி உற்பத்திக்கு வழிவகுக்கவும், புதிய தடுப்பூசிக்கு அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் புதிதாக 5 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

நாட்டில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதனுடன் 5 புதிய தடுப்பூசிகளின் பயன் பாட்டிற்கு அரசு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளது. ஸ்பூட்னிக்-வி உள்ளிட்ட 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் அவசர கால ஒப்பந்தம் வழங்க வாய்ப்புள்ளதாகவும், கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி பெரிதளவு பயன்தரும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள்

ஒருநாள் விடுமுறை எடுக்கலாம்

சென்னை, ஏப். 12-  வாக்குப் பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் அந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் மாதத்தில் ஏதாவது ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள் ளலாம் என்று தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக முதன்மை தலைமை பணியாளர் அதிகாரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வாக்குச் சாவடி பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அந்த விடுமுறையை ஈடு செய்ய ஒருநாள் விடுமுறை எடுக்க முடியும். அந்த வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் ஏப்ரல் மாதத்தில் ஏதாவது ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது

நாஞ்சில் சம்பத் பேட்டி

நாகை, ஏப்.12 தி.மு.. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று நாகையில், நாஞ்சில் சம்பத் கூறினார். நாஞ்சில் சம்பத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு. தலை மையிலான கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கலைஞர் பெற்ற வெற்றிகளை தாண்டி தி.மு.. தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் வரலாறு படைப்பார்.தி.மு. தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்படாமல் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி களை சரியான முறையில் பங்கீடு செய்து கொடுத்து  தளபதி தி.மு. ஸ்டாலின் தனது ஆளுமை திறனை நிரூபித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பே திட்ட மிட்டு கிராமசபை கூட்டம், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்என பல்வேறு கட்டங்களாக பிரச்சாரம் மேற்கொண்டு எல்லா தொகுதி மக்களையும் சந்தித்து தி.மு.. தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வழிவகை செய்தது பாராட்டத்தக்கது. எனவே தி.மு. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

.தி.மு. தலைமையிலான கூட்டணி தேர்தல் நேரத்திற்கான கூட்டணி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நான் இனி ஒருபோதும் பா...வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என கூறினார். ஆனால் அவரது பெயரை சொல்லி கட் சியை நடத்துபவர்கள் பா... வுடன் கூட்டணி வைத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகக்கவசம் அணியாததால்

1,118 பேர் மீது வழக்கு

சென்னை, ஏப். 12- கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 8ஆம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை 3 நாட்களில் சென்னையில் 1,118 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரூ.2 லட்சத்து 12,400 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத வர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Comments