51 கோயில்களை அர்ச்சகர்களிடம் தூக்கிக் கொடுத்த பா.ஜ.க. அரசு

 டேராடூன், ஏப்.12 உத்தரகண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார் நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட 51 கோயில்களின் நிர்வாகங்களை அர சாங்கமே நிர்வகிக்கும் என்று அம்மாநில பாஜகஅரசு கடந்த ஆண்டு முடிவெடுத்தது. அப்போ தைய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், இதற்கானஉத்தரவைப் பிறப்பித்தார்.

இதுதொடர்பான மசோதா வையும் அவர் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ஆளுநர் பேபி ராணிமவுரியாவின் ஒப்புதலும் பெறப்பட்டது. அரசு அறநிலையக் கட்டுப் பாட்டிலுள்ள கோயில் களை எல்லாம், அந்த மதங்களைச் சேர்ந்த அமைப்புகளிடம் ஒப் படைத்துவிட வேண்டும் என்பது தான் பாஜக-வின் நெடுநாளைய கோரிக்கையாகும். அப்படியிருக்க, உத்தரகண்டில் 51 கோயில்களை, அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், அர சாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது முக்கியமானதாக பார்க் கப்பட்டது.

ஆனால், இதற்கு எதிராக போராட்டங்களும் அங்கே துவங்கின. அர்ச்சகர்கள் அந்தந்த கோயில்களில் போராட்டங்களை நடத்தினர். ஒரு சிலர் சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துப் பய முறுத்தினர்.

பின்னர் கரோனா பொது முடக்கம் வந்ததால், இந்தப் பிரச்சினை அமுங்கிப் போனது.சமீபத்தில், உத்தரகண்ட் பாஜக ஆட்சியில் நடக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களை திசை திருப்புவதற்காக, அக்கட்சியின் தேசிய தலைமை, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை பதவியிலிருந்து நீக்கியது. தீரத் சிங் ராவத்தை புதிய முதல்வராக்கியது. இந்நிலையில் அவரை உடன டியாக சென்று சந்தித்த புரோ கிதர்கள், அர்ச்சகர்கள் மற்றும் சாமியார்கள் முன்புபோல

கோயில்களை தங்களிடமே விட்டு விடவேண்டும் என்று வலியுறுத்தினராம். அதற்கு பணிந்து உத்தரகண்ட் மாநிலத்தில், கோடிக்கணக்கில் காணிக்கை கொட்டும் 51 கோயில்களையும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டி லிருந்து விடுவித்து மீண்டும் அர்ச்சகர்களிடமே ஒப்படைப் பதென பாஜக அரசு மசோதாவை தற்போது நிறைவேற்றியுள்ளது.

 இதற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Comments