கேரளாவுக்கு 50 லட்சம் கரோனா தடுப்பூசி தேவை

மத்திய அரசிடம் கோரிக்கை

திருவனந்தபுரம்,ஏப்.18- கேரளாவில்  கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனஅதுபோல்கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளனநேற்று (17.4.2021) 1.50  லட்சத்துக்கும்  மேற்பட்டோரிடம் பரி சோதனை நடத்தப்பட்டதுஅதுபோல்இன்றும் (18.4.2021) ஒரு லட்சத்துக்கு  மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.  இந்நிலையில்,  வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வருபவர்கள் ‘கோவிட் 19 ஜாக்ரதா கேரளா’ என்ற  இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டு உள்ளதுஇதுநேற்று முதல் அமலுக்கு வந்ததுஇதற்கிடையே  கேரளாவுக்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உடனடியாக வேண்டும் என மத்திய அரசிடம் கோரப்பட்டு உள்ளது.

Comments