ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: ரயில்வே அறிவிப்பு

புதுடில்லி, ஏப்.18 ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கலாம் என்று இந்தியன் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித் துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரி ழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 1,23,354 பேர் குணமடைந்த நிலையில், கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு தற்போது 16,79,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 11,99,37,641 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கரோனா தடுப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடை பிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப் பட்டு, மீறுவோர்களிடம் அனைத்து மாநி லங்களிலும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கலாம் என்று இந்தியன் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலதிக அறிவுறுத்தல்கள் வரும் வரை இந்த உத்தரவு ஆறு மாத காலத்திற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Comments