கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 ரயில் பெட்டிகள் தயார்


 சென்னை, ஏப்.18 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி தொடங் கியது. மஸ்கட்டில் இருந்து வந்த நபரால் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் கல்லூரி விடுதிகள், அரசு கட்டடங்கள் உள் ளிட்டவைகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் செய்யப்பட்டன.

இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 573 ரயில் பெட்டி களை கரோனா வார்டுகளாக மாற்றம் செய்தது. தமிழக அரசு தயார் நிலையில் வைத்தி ருந்த படுக்கைகள் போது மானதாக இருந்ததாலும், ஊரடங்கு உள்ளிட்ட வழி முறைகள் முறையாக பின் பற்றப்பட்ட தாலும் கரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்தது. இதனால் இந்த ரயில் பெட்டி கரோனா வார்டுகள் பயன்படுத்தாம லேயே விடப்பட்டன.

இந்த நிலையில் ஊரடங் கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டது. இதை யடுத்து 573 பெட்டிகளில் 73 பெட்டிகளை மீண்டும் ரயில் போக்குவரத்துக்கு தெற்கு ரெயில்வே பயன்படுத்தியது. மீதம் இருந்த கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட 500 ரயில் பெட்டிகள் அந்தந்த இடங்களில் அப்படியே வைக்கப்பட்டி ருந்தன. அந்த வகையில் சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் பணிமனையில் 59 பெட்டிகள் வைக்கப்பட் டுள்ளன. இதில் 1,069 படுக் கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தற் போது 500 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு களாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுவரை ஒரு நோயாளி  கூட அனுமதிக்கப்படவில்லை. தமிழக அரசு கேட்டுக் கொண்டால் கரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கையை தெற்கு ரயில்வே எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments