அரசு கூறுகிறது 4 பேர் மட்டுமே மரணம் - ஆனால் சுடுகாடுகளில் எரிவதோ நூற்றுக்கணக்கான உடல்கள்

போபால், ஏப். 19 மத்தியப் பிரதேச தலைநகரில் உள்ள மருத்துவமனை குறிப்பு ஒன்றில் நான்கு கோவிட் தொற்று மரணங்கள் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

 ஆனால் ஒரே நாளில் போபால் நகருக்கு வெளியே இறந்த மாடுகளை கழுகுகளுக்கு உணவாக போட்டு வைக்கும் மைதானம் ஒன்றில் 112 உடல்கள் எரிக்கப்பட்டது என்று 'தைனிக் பாஸ்கர்' தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

 நகரில் உள்ள 4 பெரிய இடுகாடுகளில் உடல்களை எரிக்க இடமில்லாத நிலையில் ஊருக்கு வெளியே கொண்டு வந்து எரிக்கின்றார்கள். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய ஊடகத்தினரிடம் உடல்கள் அனைத்தும் மூடி முத்திரையிடப்பட்ட பைகளில் கொண்டு வருகின்றனர்.   கோவிட் மரணத்தை மட்டுமே இப்படி கொண்டுவரும் நடைமுறை உள்ளது. ஆனால் உடல்களைக் கொண்டுவரும் மருத்துவமனை ஊழியர்கள் இது தொடர்பாக எரியூட்டும் பணியாளர்களிடம் எதுவுமே கூறாமல் உடல்களை வைத்து விட்டுச் சென்று விடுகின்றனர் என்றும் அந்த தலைப்புச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

Comments