தேர்தல் ஆணையர் பதவி முடிந்த 4 ஆம் நாள் கோவா ஆளுநரா?

புதுடில்லி, ஏப்.17  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற சுனில் அரோரா, மத்திய பாஜக அரசால், கோவா மாநில ஆளுநராக விரைவில் நிய மிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக் கின்றன.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 1980ம் ஆண்டு அய்ஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தான் கேடரில் பணிபுரிந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, தேர்தல் ஆணை யர் பதவிக்கு வந்தார். அதற்கு முன்பாக தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளராக இருந்தார்.

சிறந்த நிர்வாகி என்று பெயர்பெற்றவர் இவர். தற்போது, கோவா மாநிலத்தின் ஆளுநர் பதவி காலியாக இருப்பதால், இவர் அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இவர், இராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர்.

மோதலால் பதவி விலக்கப்பட்டார்

தற்போது, மராட்டிய மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, கோவா மாநில ஆளுநர் பொறுப்பை, கூடுதலாக கவனித்து வருகிறார் கோவா ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், அம்மாநில முதல்வர் பிரமோத் சவந்துடன் ஏற்பட்ட மோதலால் பதவி விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத் தேர்தலை 8 கட்டமாக நடத்த முடிவுவெடுத்தது குறித்து தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான கண்டங்கள் எழுந்தன.

மோடி அமித்ஷா இருவரின் பிரச்சார திட்டங்களுக்கு ஏற்ப தேர்தலை ஆணையம் நேர்மையின்றி மேற்குவங்கத்தில் 8 கட்ட தேர்தல் அறிவித்துள்ளது என்று கூறப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற சுனில் அரோராவிற்கு கோவா ஆளுநர் பதவி கிடைத்துள்ளது.

Comments