புதுச்சேரியில் 45 ஆயிரத்தை தாண்டிய கரோனா தொற்று

புதுச்சேரி, ஏப்.15 புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது. மாநிலம் முழுவதும் 4,376 பேருக்கு 13.4.2021 அன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், புதுச்சேரியில் 333, காரைக்காலில் 104, மாகியில் 7, ஏனாமில் 32 என, மொத்தம் 476 பேருக்கு கரோனா தொற்று கண்டறி யப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 449 ஆக உயர்ந் துள்ளது. தற்போது, மருத்துவமனைகளில் 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,416 பேர் அவரவர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், கரோனாவில் இருந்து 242 பேர் 13.4.2021 அன்று ஒரே நாளில் மீண் டனர்.

இவர்களையும் சேர்த்து இதுவரை 41 ஆயிரத்து 719 பேர் குணமடைந்துள்ளனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருவர் இறந்தனர். இதனால், கரோனாவில் இறந் தவர் எண்ணிக்கை 698 ஆக உயர்ந்துள்ளது.

 

பி.எஸ்.என்.எல்.,லில் வாடிக்கையாளர் உயர்வு  

சென்னை, ஏப்.15 தமிழகத்தில், பி.எஸ்.என்.எல்.,லில், அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில், 65 ஆயிரத்து, 645 ஆக உயர்ந்துள்ளது.

பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறிய தாவது:தமிழகத்தில், பி.எஸ்.என்.எல்., அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு ஜனவரியில், 1 கோடியே, 9 லட்சத்து, 88 ஆயிரத்து, 625 ஆக அதிகரித்துள்ளது.

 இது, 2020 டிசம்பரில், 1 கோடியே, 9 லட்சத்து, 22 ஆயிரத்து, 980 ஆக இருந்தது.இதன்படி, வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை, ஒரு மாதத்தில், 65 ஆயிரத்து, 645 உயர்ந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments