தமிழகத்தில் கரோனா பாதிப்பு புதிதாக 4,276 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, ஏப்.9 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதி தாக 4,276 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை படிப்படி யாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட் களாக தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 2ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று (8.4.2021) ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்து 986 பேருக்கு கரோனாதொற்று ஏற்பட்டது. சிகிச்சை பெறுகி றவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இதனால் தமிழகத்தில் 2ஆவது அலை உருவாகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் நேற்று புதி தாக 4,276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழ கத்தில் கரோனாவால் பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,15,386 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மேலும் 19 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள னர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 12,840 ஆக அதிகரித் துள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,520 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கரோ னாவால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 2,59,320 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மேலும் 1,869 பேர் கரோனாசிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இத னால் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குண மடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,72,415ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 30,131 பேர் கரோ னாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Comments