ஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு கரோனா

புதுடில்லி, ஏப்.14 ஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கரோனாவின் இரண் டாவது அலை, இந்தியாவில் வேகம் காட்டி வருகிறது. இந்தநிலையில்  ராணுவ பிரிவினர் பலருக்கும் கரோனா பரிசோதனைகள் நடத்தப் பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில், துணை ராணுவ படைப் பிரிவுகளைச் சேர்ந்த 421 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பி.எஸ்.எப். ராணுவ பிரிவினரரில் 311 பேருக்கும், சி.அய்.எஸ்.எப் படைப்பிரிவினரரில் 43 பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட் டுள்ளது.

சி.ஆர்.பி.எப். பிரிவில், 28 பேர் புதிதாக தொற்று உறுதியாகி இருக்கிறது.

மேலும் அய்.டி.பி.பீ. படை பிரிவினரரில் மேலும் 31 பேருக்கும், எஸ்.எஸ்.பி. படைப்பிரிவில் கூடுதலாக 8 பேருக்கும், என்.டி.ஆர்.எப். படைப்பிரிவினர் 19 பேருக்கும் மற்றும் என்.எஸ்.சி. பிரிவுகளில் 13 பேருக்கும் நேற்று ஒருநாளில் கரோனா தொற்று ஏற்பட் டுள்ளது.

மொத்தத்தில் துணை ராணுவத்தில் இதுவரை 55 ஆயிரத்து 929 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட தாகவும், 53 ஆயிரத்து 514 பேர் சிகிச்சைக்குப் பின் குண மடைந்துவிட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கரோனாவுக்கு 208 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments