தமிழகத்தில் தினமும் ரூ.40 கோடிக்கு ‘முகக்கவசம்’ விற்பனை

சென்னை, ஏப்.14 கரோனாவை அண்ட விடாமல் பாதுகாக்க முக கவசம் அவசியமாகிவிட்டது. அதிலும் 2-ஆவது அலை வீரியத்துடன் வேகமாக பரவி வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் முகக்கவசம் அணிபவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முககவசத்தின் தேவை அதிகரித்து வருவதால் முகக் கவசம் தயாரிப்பு தொழிலும் மும்முரமாக நடக்கிறது.

பொதுவாக முகக் கவசம் 3 முதல் 5 அடுக்குகளை கொண்டதாக இருக்க வேண்டும். அதில் நடுவில் இருக்கும்லேயர்கரோனா வைரசை வடிகட்டும். அதாவது அணிந்துள்ளவரிடம் இருந்து கரோனா வைரஸ் அடுத்தவருக் கும் பரவாது. அடுத்தவர்களிடம் இருந்து முகக்கவசம் அணிந்து இருப்ப வரின் மூக்கு, வாய் வழியாக செல்லவும் முடியாது. முகக் கவசத்தின் நடுவில் இருக்கும் லேயரில் வைரஸ்கள் வடி கட்டப்படுகிறது.  மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக இருக்கும் இந்த முகக் கவசத்தை பயன்படுத்தும்போது முறையாக பயன்படுத்தினால் மட்டுமே பலன் உண்டு. அதாவது முகக் கவசத்தை அணிந்த பிறகு அதை அடிக்கடி கைகளால் தொடுவது, கழற்றி சட்டை பையிலோ, பேக்கிலோ வைத்துவிட்டு மீண்டும் பயன்படுத்துவது போன்ற வற்றை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் அந்த முகக் கவசத்தில் தங்கி இருக்கும் வைரஸ் கைகளிலோ சட்டை பை மற்றும் பேக்கிலோ ஒட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே, முகக் கவசத்தை ஒருமுறை பயன்படுத்திவிட்டு அழிப்பதே

நல்லது.

மீண்டும் பயன்படுத்தும் முகக் கவசங்களை கழற்றி கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து கிருமிநாசினியால் சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். ஆனால் நடவடிக்கைகளுக்கு பயந்து, ஏதோ ஒரு முகக் கவசம் அணிய வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் துணியால் ஆன முகக் கவசங்களை அணிகிறார்கள்.

இதற்காக தெருத் தெருவாக முகக் கவசம் விற்பனைக்கும் வந்துவிட்டது. அவை ரூ.10 முதல் ரூ.25 வரை விற்கப்படுகிறது. இந்த மாதிரியான காட்டன் துணியால் முகக் கவசம் தயாரிப்பது குடிசை தொழிலாக மாறி இருக்கிறது. முன்னணி உள்ளாடை மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களும் முகக் கவசம் தயாரிப்பில் இறங்கி உள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முகக் கவசங்களை வாங்கி அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. ஏனெனில் தினமும் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவாகிறது என்பதால் அந்த மாதிரி முகக் கவசத்தை வாங்கி பயன்படுத்த தயங்குகிறார்கள்.

ஆனால், மருத்துவமனைகள், சுகாதாரப் பணிகளில் ஈடுபடுபவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் முகக் கவசத்தையே பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் சுமார் 10 லட்சம் முகக் கவசங்கள் விற்பனையாகிறது. சுமார் ரூ.40 கோடி வரை வியாபாரம் நடப்ப தாக கணிக்கப்பட்டுள்ளது.

நோஸ்பின்னுடன் கூடிய 3 முதல் 5 அடுக்கு வரை உடைய முகக் கவசங்கள் மொத்த விலைக்கு ரூ.2 முதல் ரூ.மூன் றரை வரை விற்கப்படுகிறது.

இதுவே சில்லரை விலைக்கு ஒரு முகக் கவசத்தின் விலை ரூ.10 வரை விற்பனை யாகிறது.

இவை தவிர இணையதளத்திலும் பல ரகங்களில் முக கவசங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது.

ஒருமுறை பயன்படுத்தும் முகக் கவசங்கள் ஒரு பண்டல் ரூ.299 முதல் 569 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ழி95 மற்றும் காட்டன் துணியால் ஆன முகக் கவசங்களும் பல வண்ணங்களில் பல வடிவங்களில் விற்ப னைக்கு வந்துள்ளது.

இணையவழி விற்பனை, மருத்துவ துறை பயன்பாடு, பொதுமக்கள் வாங்குவது ஆகியவை சேர்ந்து சுமார் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை நடப்பதாக கூறுகிறார்கள்.

Comments