ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி: 8 கட்சிக் கூட்டத்தில் முடிவு

சென்னை,ஏப். 26- ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட 4 மாதங்க ளுக்கு மட்டும் அனுமதிக்க லாம் என்று 8 கட்சிக் கூட்டத்தில் முதல்வர் பழனி சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 8 கட்சிக் கூட்டத்திற்கு முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமிதலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் .பன்னீர்செல் வம், அமைச்சர்கள் விஜய பாஸ்கர், உதயகுமார் கலந்து கொண்டனர். தி.மு. சார்பில் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி,  காங்கிரஸ் சார்பில் தங்க பாலு, ஜெயக்குமார், மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூ. கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன் உள்பட 8  கட்சிகளின் பிரதிநிதிகள்  பங்கேற்றனர்.

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், வருவாய் நிர் வாக ஆணையர் பனீந்தர் ரெட்டி, அதுல்ய மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்பட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கக் கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவை ஏற்று நடத்தினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக் கல் கவிஞர் மாளிகையில் இன்று (26.4.2021) காலை 9.15 மணிய ளவில் 8 கட்சிக் கூட்

டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.

இந்த நிலையில், ஆலோ சனையின் போது, ஸ்டெர் லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கலாம் என திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தென் தமிழகத்திற்கு முன்னு ரிமை வழங்க வேண்டும் என் றும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தான் தயாரிக்கப் படுகிறதா என்பதை கண் காணிக்க அனைத்துக் கட்சி குழு அமைக்கலாம் என்றும் தி.மு.. சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஸ்டெர் லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தவிர வேறு செயல்பாடுகளுக்கு மின்சா ரம் தரக்கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித் துள்ளார்.

இதனிடையே 8 கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'கரோனா தொற்று அதிகரித்து வருவ தால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, மூடி யதே தமிழக அரசுதான். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனு மதி அளிக்கலாம். ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கண்காணிக் கப்படும்,' எனத் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் உற்பத்தி யாகும் ஆக்சிஜனை அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு வழங்க கூடாது என முத் தரசன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments