3ஆவது டோஸ் தடுப்பூசி, கரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா? - நிபுணர்கள் பதில்

புதுடில்லி, ஏப். 20- 3ஆவது டோஸ் தடுப் பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எந்த அடிப்படையில் தீர் மானிக்க வேண்டும், 3ஆவது டோஸ் தடுப்பூசி, கரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்து உள்ளனர். கரோனா வைரஸ் தொற் றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்தியாவில் தற்போது கோவேக் சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப் பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவ் விரு தடுப்பூசிகளும் 2 டோஸ் எடுத் துக்கொள்ள வேண்டும். கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோசை பெற்ற 4 வாரங்களுக்கு பின்னர் 2-வது டோஸ் பெற வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி என்றால் அதன் முதல் டோஸ் போட்டு 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்கு பின்னர் இரண்டா வது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள், தங்களது தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொண்ட பினனர் ஒரு கூடுதல் டோஸ் (பூஸ்டர் டோஸ்) தேவைப்படலாம், அதன்பின்னர் ஆண்டுக்கு ஒரு முறையும் போட்டுக் கொள்ளும் தேவை எழலாம் என கூறின.

இதற்கிடையே இந்த மாதத்தின் தொடக்கத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்சின் தடுப் பூசியின் மூன்றாவது டோசை பரி சோதனை அடிப்படையில் தன்னார் வலருக்கு வழங்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநரக நிபுணர் குழு, அனுமதி அளித்தது.

2 டோஸ் எடுத்துக்கொண்டு 6 மாதங்களுக்கு பின்னர் கூடுதலாக ஒரு டோஸ் (பூஸ்டர் டோஸ்) எடுத் துக்கொள்ளலாம் என பாரத் பயோ டெக் நிறுவனம் முன்மொழிந்தது.

ஆனால் 3ஆவது டோஸ் தடுப் பூசியின் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் செயல்திறன் பற்றி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், இரண்டா வது அலை வீசி வருகிற நிலையில், மூன்றாவது டோஸ் தடுப்பூசியானது தொற்றுநோயை எதிர்த்து போராடு வதுற்கு உதவுமா என்பதை தீர்மா னிக்க கூடுதல் ஆய்வுகள் தேவை என கூறுகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சமீரண் பாண்டா (இந்திய மருத் துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்):-

2ஆவது டோசுக்கு பின்னர் மூன் றாவது டோஸ் தடுப்பூசி போட வேண் டும் என்று தடுப்பூசி நிறுவனங்கள் தீர்மானித்தால், அது நோய் எதிர்ப்பு தன்மை பற்றிய தரவுகளின் அடிப் படையில்தான் இருக்க வேண்டும்.

அதாவது, 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு நோய் எதிர்ப்பு பொருள் செறிவு நிலை என்ன, எவ் வளவு காலம் கழித்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அது கீழே வந்து, மூன் றாவது டோஸ் தேவைப்படும் என் பதை முடிவு செய்ய வேண்டும்.

ஏன் இப்படி 3ஆவது டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று கம்பெனிகள் கூறுகின்றன என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இது தொடர்பாக என்ன தரவுகள் இருக்கின்றன? கரோனா வந்தது, 2019 டிசம்பர். தடுப்பூசிகள் கடந்த ஏப்ரல், ஆகஸ்டில் வந்தன. எனவே போதுமான தரவுகள் கிடையாது. 3ஆவது டோஸ் பற்றி ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கக் கூடாது. தரவுகளின் அடிப்படையில் தான் முடிவு எடுக்க வேண்டும்.

மருத்துவர் கிரிதரா ஆர்.பாபு (இந்திய பொது சுகாதார அறக்கட்ட ளையின் ஆயுட்கால தொற்றுநோயியல் துறையின் தலைவர்):-

3ஆவது டோஸ், கரோனாவை எதிர்த்து இன்னும் திறம்பட போராட உதவுமா என்பதை பார்க்க வேண்டும். கரோனாவில் இருந்து எவ் வளவு காலத்துக்கு தடுப்பூசி பாது காப்பு தரும் என்பதன் அடிப்படையில் பூஸ்டர் டோஸ் தருவது பற்றி தீர் மானிக்க வேண்டும். பூஸ்டர் டோஸ், ரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மற்றொரு நிபுணர் கூறியதாவது, “எதிர்காலத்தில் வேண்டுமானால் 3-வது டோஸ் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கலாம். தற்போது அல்ல. 3-வது டோஸ் தடுப்பூசி தேவைக்கான தரவு கள் இல்லை. புளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி போல கொரோனாவுக்கும் ஆண்டு தோறும் தடுப்பூசி தேவைப் படலாம். ஆனால் இப்போதே அதை ஊகிக்க முடியாது. இந்த வைரஸ் புதிதானது. தடுப்பூசி வந்து ஒரு வரு டம் கூட ஆகவில்லை. எனவே இன் னும் கூடுதல் தரவுகளும், ஆய்வுகளும் தேவை.” இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Comments