டில்லி கங்காராம் மருத்துவமனையில் மருத்துவர்கள் 37 பேருக்கு கரோனா


 புதுடில்லி, ஏப். 10  நாடு முழுவதும் கரோனா 2ஆவது அலை பரவி வருவதால் மத்திய மாநில அரசுகள் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில்தலைநகர் டில்லியில் உள்ள பிரபல மருத்துவமனையான சர் கங்கா ராம் மருத்துவமனையில் பணியாற்றி வரும்  37 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கரோனா மீண்டும் தீவிரமாகப்  பரவி வருகிறது. டில்லியில், 8.4.2021 அன்று ஒரு நாளில் 7,437 பேருக்கு பாதிப்பு உயர்ந்துள்ளதுடன், 24 பேர் பலியாகி உள்ளனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், டில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அவர்களில்  32 பேர் வீட்டிலேயே தங்களை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

Comments