மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க மீனவர்கள் கோரிக்கை

சென்னை, ஏப். 19- மீன்பிடி தடைக்கால நிவாரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.82 என 61 நாட்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய பொருளாதாரச் சூழலில் இதை வைத்து மீன வர்கள் எப்படி குடும்பத்தை நடத்த முடியும். எனவே, மீன் பிடி தடைக்கால நிவாரணத்தை ஒரு நாளுக்கு ரூ.500 என உயர்த்தி 61 நாட்களுக்கு ரூ.30 ஆயிரமாக வழங்க வேண்டும்.

இதேபோல், கரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக மீனவர்களால் மீன்பிடி தொழிலை சரிவர செய்ய முடியவில்லை. எனவே, மீன்பிடி தடை காலத்தில் ஒவ்வொரு விசைப் படகையும் பராமரிக்க தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்..

Comments