புதுவையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் டெபாசிட் இழந்த பா.ஜ.க.

தமிழ்நாடு - புதுச்சேரி உள்பட பா... ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியாது!

புதுவை தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் உறுதி

புதுவை, ஏப். 2  புதுவையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களில் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி 29 இடங்களில் டெபாசிட் இழந்தது. ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு - புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் ஓரிடத்தில்கூட பா... வெற்றி பெற முடியாது. புதுச்சேரியில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புதுவையில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கடந்த 31.3.2021 அன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரி சுதேசி மில் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதியன்று சட்டமன்றத்திற்கு நடைபெறக்கூடிய பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணியான - காங்கிரஸ், தி.மு.., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணியை ஏன் ஆதரிக்கவேண்டும்? என்பதை வலுவாக எடுத்துக் கூறக்கூடிய ஒரு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய - கரோனா காலகட்டத்திலும் நல்ல வண்ணம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய புதுவை மாநில திராவிடர் கழகத்தின் தலைவர் அருமைத் தோழர் மானமிகு சிவ.வீரமணி அவர்களே,

வரவேற்புரையாற்றியுள்ள புதுச்சேரி மாநில திராவிடர் கழக செயலாளர் தோழர் மானமிகு சடகோபன் அவர்களே,

வரவிருக்கின்ற மேனாள் முதலமைச்சர் அன்பிற் குரிய நண்பர் திரு.வே.நாராயணசாமி அவர்களே,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சார்ந்த ஜிகினி முகமது அலி அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியைச் சார்ந்த சகாபுதீன் அவர்களே,

எனக்கு முன் இங்கே உரையாற்றிய அருமை நண்பர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்களே,

திராவிடர் கழகக் காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களே, மண்டல செயலாளர் அறிவழகன் அவர் களே, மகளிரணி தோழியர்களே, நன்றியுரை கூற விருக்கக்கூடிய மண்டல அமைப்பாளர் அருமைத் தோழர் இராஜூ அவர்களே,

ஏனைய அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, கூட்டணி கட்சிகளைச் சார்ந்த நண்பர்களே!

இந்தக் கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெறுகின்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல் கூட்டமாகும். இது ஒரு முழுப் பொதுக்கூட்டமாக இருந்தால், விரிவாக, விளக்கமாக உங்களிடையே கருத்துகளைச் சொல்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கும். ஆனால், அதுபோன்ற வாய்ப்பு இப்பொழுது இல்லை.

குறைவான நேரத்தில்தான், கருத்துகளை எடுத்து உங்களிடையே சொல்லிவிட்டு, அடுத்தது கடலூர் தொகுதியில் நடைபெறும் பிரச்சாரத்திற்குச் சென்று, அதற்கடுத்து, நெய்வேலியில் நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கேற்று விட்டு, திருச்சிக்குச் சென்று தங்கவிருக்கிறோம்.

இந்தத் தேர்தல் என்பது மிகவும் வித்தியாசமான ஒரு தேர்தல்!

ஆகவே, தொடர்ந்து இதுவரையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கக்கூடிய  தேர்தல் என்பது மிகவும் வித்தியாசமான ஒரு தேர்தல். இதற்கு முன்பு  எத்த னையோ தேர்தல் நடைபெற்று இருக்கலாம். ஆனால், புதுச்சேரியைப் பொறுத்தவரையில் அந்த வித்தியாசம், இன்னும் அதிகமான வித்தியாசத்தோடு  அமைந்து தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அதைப்பற்றி விரிவாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அண்டை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஆட்சி, ஜனநாயக ரீதியாக கவிழ்க்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லாமல் இயல்பாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அனைவரும் பொறுப்புணர்ச்சியோடு உற்றுப் பார்க்கக்கூடிய ஒரு சூழல்

ஆனால், இங்கே நடைபெறவிருக்கக்கூடிய இந்த சட்டப்பேரவைத் தேர்தல், இந்தியாவே உற்றுப் பார்க்கக் கூடிய அளவில், ஜனநாயகத்திற்காக வாதாடக்கூடிய வர்கள், மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்றவேண்டும் என்று நினைப்பவர்கள், சமதர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், குலதர்மம் கொடியேற்றப்படக் கூடாது என்பதில் குறியாய் இருப்பவர்கள், சமூகநீதி எப்படியும் காப்பாற்றப்படவேண்டும் - அனைவருக்கும் அனைத் தும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் - முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆகிய அத்தனை பேரும், புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலை - கவலையோடு, வெளியில் இருக்கக்கூடிய மக்களாக இருந்தாலும், அவர்கள் பொறுப்புணர்ச்சியோடு உற்றுப் பார்க்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

காரணம் என்னவென்றால், வாக்காளப் பெரு மக்களாகிய நீங்கள், கடந்த அய்ந்தாண்டுகளுக்கு முன்பு,  யாருக்காக வாக்களித்து, எந்தக் கூட்டணிக்கு, எந்தக் கட்சிக்காக வாக்களித்து, எந்தக் கொள்கைக்காக வாக்களித்து, உங்களுடைய பிரதிநிதிகளை சட்டப் பேரவைக்கு அனுப்பவேண்டும் - அவர்கள் முதல மைச்சரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் - அதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி நிலை நாட்டப்பட்டு நடைபெறவேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி - ஆற்றொழுக்காக நடந்துவந்த ஓர் ஆட்சி - காங்கிரஸ் தலைமையில்  அமைந்த  அந்த ஆட்சி. மானமிகு மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அய்யா நாராயணசாமி அவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். மத்திய அமைச்சராக இருந்தவர், காங்கிரஸ் கட்சியில் பொறுப் பில் இருந்தவர். இப்படி பல கனிந்த அனுபவம் உடை யவர். சமூகநீதியில் ஆழமான நம்பிக்கை உடையவர்.

கொல்லைப்புற வழியாக ஆட்சியை கவிழ்த்தவர்கள்!

அவர் இந்தப் புதுவை மாநிலத்தின் முதல்வராகப் பணி புரிந்தவர். மக்களால் வாக்களிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக வந்தவர். நாமினேசனில் வந்தவர் அல்ல அவர்.  அவருடைய அமைச்சரவையை, கொல்லைப்புற வழியாக பா... டில்லியில் இருக்கக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத் தியும், பல யுக்திகளைப் பயன்படுத்தியும், மோடி வித்தைகளைப் பயன்படுத்தியும் கடந்த பிப்ரவரி மாதம் கவிழ்த்தார்கள்.

ஜனநாயகப் படுகொலை நடந்தது. திராவிடர் கழகத்துக்காரர்கள் அன்றைக்கே தெளிவாக அறிக்கை விடுத்தோம் - இன்றைக்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்று வதற்கு நாராயணசாமி அய்யா போன்றவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அதேபோல அந்தக் கவலை எங்களுக்கு உண்டு.

ஏனென்றால், இந்தியாவே உற்றுப் பார்க்கக்கூடிய அளவிற்குப் புதுசேரி சட்டப்பேரவை தேர்தல் இருக் கிறது.

ஜனநாயகவாதி போன்று பேசுகிறார் பிரதமர் மோடி!

இவ்வளவு பெரிய ஜனநாயகப் படுகொலையை நடத்திவிட்டு, பிரதமர் இங்கே வந்து பேசுகிறார், ஏதோ பெரிய ஜனநாயகவாதி போன்று பேசுகிறார். இதைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லவிருக்கிறேன்.

அந்த வகையில், மக்களிடம் நியாயம் கேட்க வேண்டும்; மக்களைச் சந்திக்க வைக்கவேண்டும். ஏனென்றால், இது எங்கள் பிரச்சினையல்ல - புதுச்சேரி வாக்காளர்களுடைய மானப் பிரச்சினை - உரிமைப் பிரச்சினையாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சிக்கு எப்படி ஜனநாயகப் படுகொலை நடைபெற்றது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்றைக்குக் காலையில் வெளிவந்தஇந்து' பத் திரிகையில் அருமையான தலையங்கம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். அதில் பல செய்திகளை எடுத்து எழுதியிருக்கிறார்கள்.

எப்படி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கலாம் -

மதச்சார்பற்ற ஓர் அரசை எப்படி அவர்கள் குறுக்கு வழியில் கவிழ்த்தார்கள் - எப்படியெல்லாம் வித்தைகள் காட்டுகிறார்கள் என்று அதில் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அதனை வாக்காளர்ப் பெருமக்களாகிய உங்களிடம் எடுத்துச் சொல்வதற்காகத்தான் திராவிடர் கழகம் இங்கே பிரச்சாரம் செய்கிறது.

இந்தத் தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.

எத்தனையோ இடையூறுகளைப் பொறுத்துக் கொண்டுதான் முதலமைச்சர் நாராயணசாமி அய்யா ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார்.

நான்கே முக்கால் ஆண்டுகாலம் வரை ஆட்சி செய்ததே முதல் சாதனை!

ஆனால், இப்பொழுது அவர்கள் கேட்கிறார்கள், ‘‘நாராயணசாமி என்ன செய்தார்? என்னென்ன சாத னைகள் செய்தார்?''  என்றெல்லாம் அறிவு நாணயத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பேசுகிறார்கள். அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறோம்,

புதுச்சேரி முதலமைச்சர், காங்கிரஸ் சார்பில், கூட்டணி சார்பாக அமைந்துள்ள ஓர் ஆட்சியின் முதலமைச்சர் தொடர்ந்து பணியாற்றி, நான்கே முக்கால் ஆண்டுகாலம் வரை ஆட்சி செய்ததே முதல் சாதனையாகும்.

ஒவ்வொரு நாளும் முள்படுக்கையின்மீது அமர்ந்து கொண்டிருப்பதைப்போல, சங்கடத்தோடுதான் அவர் ஆட்சியை நடத்தினார்.

இங்கே இரண்டு அணிதான் போட்டி போடுகின்றன. இரண்டு மல்யுத்த வீரர்களை - இரண்டுபேரை குஸ்தி போடுங்கள் என்று சொல்லி கோதாவில் இறக்கினால், இரண்டு பேரும் மல்யுத்தத்தில் இறங்கலாம், அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.

இந்து' பத்திரிகை தலையங்கம்

கடந்த அய்ந்தாண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய நிலை என்ன? இதை நான் சொல்லவில்லை - இன்று காலையில் வெளிவந்துள்ளஇந்து' பத்திரிகை தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களில் பா...வினர் போட்டியிட்டனர். அந்த 30 இடங்களில், ஓர் அரிய சாதனையை பா... நிகழ்த்தியிருக்கிறது.

இதுவரையில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று நடைபெறவில்லை. அந்த சாதனையோடுதான், மோடியை அவர்கள் அழைத்து வருகிறார்கள்; அந்த சாதனையோடுதான் வாக்காளப் பெருமக்களை சந்திக்கிறார்கள்.

கடந்த தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிட் டார்கள். 30 வேட்பாளர்கள் கிடைத்திருக்கிறார்களே, அதுவே அதிசயம்தான்.  எப்படி எப்படியோ ஆட்களைப் பிடித்து, எந்தக் கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை எங்களிடம் வாருங்கள் என்று சொன்னார்கள்.

புதுவையில் 29 இடங்களில் டெபாசிட் இழந்த கட்சிதான்  பாரதீய ஜனதா கட்சி

அப்படி ஆட்களைக் கொண்டு வந்து, 30 இடங்களில் போட்டியிட்ட பா... 29 இடங்களில் டெபாசிட் இழந்த கட்சிதான் பாரதீய ஜனதா கட்சி.

மீண்டும் சொல்கிறேன், இதை நான் சொல்லவில்லை; இன்றைக்கு வெளிவந்தஇந்து' பத்திரிகை தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது.

நடைபெறப் போகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதுதான் நடைபெறப் போகிறது, அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

தமிழ்நாட்டிலும் 20 இடங்களிலும் பா...வுக்குத் தோல்விதான்!

தமிழ்நாட்டில் நடைபெறப் போகின்ற தேர்தல் முடிவு குறித்து ஒரு வாரப் பத்திரிகை வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பா... வாங்கியிருக்கின்ற 20 தொகுதிகளிலும், தோல்விதான் அடையும் என்று தெளிவாக எழுதியிருக் கிறார்கள். அதையும் தெளிவாகப் புதுச்சேரி மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கே ஒரு ஜனநாயகப் படுகொலையை நடத்தி யிருக்கிறார்கள். அதில் நியாயம் இருக்கிறதா? இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப் போகிறது - அதற்குள் என்ன அவசரம் உங்களுக்கு? குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று நினைத்தார்கள் - 29 இடங்களில் டெபாசிட் இழந்த கட்சி - சட்டப் பேரவையில் ஒரு உறுப்பினர்கூட இல்லாத ஒரு கட்சி பா...

ஜனநாயகம் - மக்களாட்சி பிழைக்கவேண்டும்

ஜனநாயகத்தில் அக்கறை உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும் - நாராயணசாமியா? காங்கிரசா? தி.மு..வா? இன்னொரு கட்சியா? என்பது முக்கியமல்ல நண்பர்களே, எங்களுக்கு என்ன கவலை என்றால், ஜனநாயகம் - மக்களாட்சி பிழைக்கவேண்டும்.

ஜனநாயகத்திற்கு குழிதோண்டி விட்டால், மக்களாட்சி இல்லை என்று சொன்னால், அதனால் எந்தப் பயனும் கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள மக்களாட்சி என்றால் என்ன?

Sovereign Socialist Secular Semocratic Republic

என்பதாகும்.

மேற்கண்ட அய்ந்து அம்சங்களுக்கும் விரோதமாக இருப்பதுதான் பா...

அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு - அந்த அரசமைப்புச் சட்டத்தினுடைய தத்துவங்களுக்கு நேர் எதிராக நடந்துகொண்டு - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை எப்படி கவிழ்த்தார்கள் இங்கே - இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

மக்கள் நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது. நிலையான ஆட்சியை நாராயணசாமி அவர்கள் கொடுத்தாரா? இல்லையா?

இதுவரை புதுவையில் நிலையான ஆட்சி - நான்கே முக்கால் ஆண்டுகாலம் இருந்ததாக வரலாறு கிடையாது.

எதிர்க்கட்சியில் இருப்பவர்களையெல்லாம் விலைக்கு வாங்கினார்கள்

ஒரு வாதத்திற்காக சொல்கிறேன், ஆட்சியில் நிறை இருக்கலாம்; குறை இருக்கலாம்.  அப்படியே ஏதாவது குறை இருந்தாலும், தேர்தல் வரும்பொழுது, மக்கள் மன்றத்தை சந்தித்திருக்க வேண்டாமா? இந்த ஆட்சி, இப்படி இப்படியெல்லாம் செய்திருக்கிறது - நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற திட்டங்களையெல்லாம் செய்யப் போகிறோம் என்று சொல்லி, ஜனநாயகத்தின் வழியாக நீங்கள் வந்திருக்கவேண்டுமே தவிர-

அப்படியில்லாமல், நீங்கள் என்ன செய்தீர்கள்? எதிர்க்கட்சியில் இருப்பவர்களையெல்லாம் விலைக்கு வாங்கினீர்கள்; குதிரை பேரம் நடத்தினீர்கள்.

மூன்று பேரில் ஒருவர் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தவர்!

திரிசூலத்தோடு மோடி தேர்தல் நடத்துகிறாராம் புதுச்சேரியில்.  முதல் சரக்கு, மூன்று நாமினேட்டட் மெம்பர்கள் - நியமனம் செய்யப்பட்ட மூன்று உறுப் பினர்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தேர்தலில் நின்று, டெபாசிட் இழந்தவர் ஒருவர் இருக்கிறார்.

(தொடரும்)

Comments