கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ஆம் தேதி நடைபெறும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ஆம் தேதி நடைபெறும்

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடில்லி, ஏப்.13 கேரளாவில் 3 மாநிலங் களவை இடங்களுக்கான தேர்தல் 30-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து நாடாளு மன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்ட அப்துல் வகாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கே.கே.ராகேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வயலார் ரவி (காங்கிரஸ்) ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 21-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் இம்மாதம் 30-ஆம் தேதி நடை பெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று (12.4.2021) அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கை செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிடப்படும் என்றும், ஏப்ரல் 30-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது காலியாகும் 3 இடங்களுக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால் அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென நிறுத்திவைத்திருந்தது. இந் நிலையில் குறிப்பிட்ட 3 இடங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

கேரளாவில் உணவகங்கள், கடைகளை

இரவு 9 மணிக்குள் மூட உத்தரவு

திருவனந்தபுரம், ஏப்.13 கேரளாவில் கரோனா தொற்று நாளுக்குநாள் வேக மாக பரவி வருவதால் அதனை தடுக்கும் வகையில் உணவகங்கள், கடைகளை இரவு 9 மணிக்குள் மூடவும், அன்னதானம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரத்தில் தலைமை செய லாளர் ஜாய் தலைமையில் நேற்று (12.4.2021) அவசர ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது.

இந்த கூட்டத்தில் சுகாதார துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சி யர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தலைமை செயலகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநிலம் முழுவதும் உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்களை இரவு

9 மணிக்கு முன்னதாக அடைக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகள் 2 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடத்த கூடாது. அவ்வாறு நடத்தப்படும் கூட்டங்களில் 200-க்கும் அதிகமான நபர்களை அனு மதிக்க கூடாது. கூடாரங்களில் நடை பெறும் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது.

ஒட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ஒரே நேரத்தில் வாடிக்கையாளர் களை அனுமதிக்க வேண்டும். பொருட் காட்சி, கண்காட்சி ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. பொது நிழ்ச்சிகளில் அன்னதானம் நடத்த தடை விதிக்கப்படு கிறது. அதற்கு பதிலாக உணவுப் பொட்டலங்கள் வழங்கலாம். குருவாயூர் கோவிலில் அதிகாலை 2.30 முதல் 4.30 வரை மட்டுமே விஷூ தினத்தன்று கனி காண அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment