நம்மையும் நாட்டு மக்களையும் பாதுகாப்போம் 2ஆவது முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை,ஏப்.26- திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கரோனா தடுப்பூசியை இரண்டாம் முறை செலுத்திக்கொண்டார். செவிலியர் தடுப்பூசி செலுத்தும் படத்துடன் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தையும் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு,

இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று (25.4.2021) எடுத்துக் கொண்டேன்.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!

நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!

Comments