கரோனா 2ஆம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா

கொல்கத்தா,ஏப், 20- நாடு முழுவதும் கரோனா 2ஆம் அலை பரவ பிரதமர்  மோடி யின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா குற்றம் சாட் டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் பொது மக்கள் மத்தியில் மம்தா பேசி யதாவது: நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கரோனா தொற்று  இருக் கிறது.

கடந்த 6 மாதங்களாக கரோனா தொற்றைக் கட் டுப்படுத்துவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொள்ளா தது ஏன்? இதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்.

கரோனா 2ஆம் அலை பரவ மோடியே காரணம். தகுந்த நேரத்தில் உரிய நட வடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டிருந்தால், தற்போது 2ஆம் முறையாக கரோனா பரவும் நிலை ஏற்பட்டு இருக்காது என்று கூறினார்.

Comments